JKR. Blogger இயக்குவது.
அதிபர் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிபர் ஒபாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திஸ்ஸநாயகத்தை விடுதலை செய்யக் கோரி அமெ.ஜனாதிபதி ஒபாமா கடிதம்


சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அலரி மாளிகையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து சட்டமா அதிபரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன்.

முன்னொரு போது என்மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நான் உரிய முறையில் சட்டத்தரணி மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியளித்தவர்கள் பொய் சாட்சி சொன்னமைக்காக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திஸ்ஸ நாயகமும் தனது தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ளலாம். இதனை விடுத்து திஸ்ஸநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.

திஸ்ஸநாயகத்தை விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கோணவெல சுனிலுக்கு பிணை கொடுத்தது போல் நான் பிணை வழங்க முடியாது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது நீதிமன்றத்தை அவமதித்தாக அமைந்துவிடும்" என்று கூறினார்.
Ler Mais

திபெத் சீனாவின் ஒரு பகுதி - ஒபாமா திடீர் அங்கீகாரம்


பெய்ஜிங்: திபெத் சீனா வின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார்.

சீனாவில் விஜயம் செய்து வரும் ஒபாமா பெய்ஜிங்கில் சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம், சீனாவுக்கும், திபெத்த்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா விரும்புகிறது.

இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீளுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார்.

பின்னர் ஹூ பேசுகையில், சீனாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் அமெரிக்கா சிறப்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதற்காக அதிபர் ஒபாமாவை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஒரே சீனா என்ற தத்துவத்தை அமெரிக்க அதிபர் வலியுறுத்துவதையே திபெத் குறித்த அவரது கருத்து வெளிப்படுத்துகிறது என்றார்.

முன்னதாக சமீபத்தில் தலாய் லாமா வாஷிங்டன் வந்தபோது அவரை பார்க்க மறுத்து விட்டார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ler Mais

உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பராக் ஒபாமா முதலிடம்

உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் ஒபாமாவை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கியுள்ளார் தாதா தாவூத் இப்ராகிம்.

உலகின் மோசமான தாதாக்களி்ல ஒருவர் தாவூத் இப்ராகிம். மும்பை தொடர் குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளது.

இவர் பாகிஸ்தானில் தொடர்ந்து தலைமைறவாக இருந்து வருகிறார். இந்நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க அதிபரை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கி உள்ளார் தாவூத். அதேசமயம், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா ஆகியோரை விட தாவூத் சக்தி வாய்ந்த நபராகவும் இதில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிம் 50ஆவது இடத்தில் இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் 36ஆவது இடத்திலும், மிட்டல் 55ஆவது இடத்திலும், டாடா 59ஆவது இடத்திலும் உள்ளனர்.

அல் கொய்தா தலைவர் பின் லேடன் 37ஆவது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 'குற்ற கட்டமைப்பான டி கம்பெனியின் தலைவர் தாவூத் இப்ராகிம்' என்று போர்ப்ஸ் வர்ணித்துள்ளது.
Ler Mais

ஆப்கானுக்கு கூடுதல் துருப்புக்கள் : ஒபாமா ஆலோசனை

ஆப்கானில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக தனது பாதுகாப்பு குழுவுடன் முக்கிய கூட்டம் ஒன்றை ஒபாமா நடத்திவருகிறார்.

இது தொடர்பாக நான்கு வழிகள் ஆராயப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை கூறுகிறது. இவையனைத்தும் கூடுதல் படையினரை அங்கு அனுப்புவதை மையமாகக் கொண்டவை என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஆப்கானுக்கு 30,000 முதல் 45,000 துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற யோசனைக்குத்தான் கூடுதலான ஆதரவு இருப்பதாக பிபிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒபாமா தூர கிழக்கு நாடுகளுக்கான தனது பயணத்தை அடுத்த வாரம் முடித்துத் திரும்பும்வரை இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Ler Mais

ஒபாமாவின் நிர்வாகத்தில் மற்றுமொரு இந்தியருக்குப் பதவி


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன் நிர்வாகத்தில் பல இந்தியர்களுக்கு இடம் அளித்து வருகிறார். இப்போது வர்த்தகத்துறை உதவி அமைச்சராக சுரேஷ்குமார் என்ற இந்தியரை நியமித்திருக்கிறார்.

இவர் 1970ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை தூரதர்ஷன் டி.வி. சேனலின் தேசிய ஒளிபரப்பில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். கைசென் இன்னோவிஷன் என்ற கம்பெனியின் தலைவராகவும்,மேலாண் இயக்குநராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

கிளிண்டன் அறக்கட்டளையின் தனி அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர். ஜோன்சன் அண்ட் ஜோன்சன் கம்பெனியிலும் பணியாற்றி இருக்கிறார்.

டொராண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் வர்த்தகக் கல்வி ஆசிரியராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
Ler Mais

அமெரிக்காவின் எப்.பி.ஐ. சேவைக்கு ஒபாமா பாராட்டு


தீவிரவாத ஒழிப்பிலும் அதுதொடர்பான நடவடிக்கைகளிலும் அமெரிக்க அரசின் நீதித்துறை, எப்.பி.ஐ. ஆகியவற்றின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. இவர்களால்தான் தீவிரவாத அச்சுறுத்தலையும் தாண்டி அமெரிக்கா வெற்றி நடை போட முடிகிறது என்று பாராட்டியுள்ளார் அதிபர் பராக் ஒபாமா.

நியூயோர்க் நகருக்கு வந்த ஒபாமா, அங்குள்ள சிட்டி சென்டருக்கு விஜயம் செய்தார். அங்குள்ள ஊழியர்களிடையே அவர் பேசுகையில்,

"நீதித்துறை, எப்பிஐ அதிகாரிகள் அடங்கிய அதிரடிப் படையினரின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

இவர்களின் தியாகம் மற்றும் முயற்சிகளால்தான் இன்று தீவிரவாத அச்சுறுத்தலைத் தாண்டி அமெரிக்கா தொடர்ந்து வெற்றி நடை போட முடிகிறது. தீவிரவாதிகளின் கட்டமைப்புகளைத் தகர்க்க முடிகிறது.

குறிப்பாக நியூயோர்க் எப்பிஐ அலுவலகத்தின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை. அவர்களின் துரிதமான நடவடிக்கையால், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்கர்களைக் கொல்ல நஜிபுல்லா ஜாஸி திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

நியூயோர்க் நகரைத் தாக்க ஜாஸி தலைமையிலான குழுவினர் திட்டமிட்டிருந்ததாக எப்பிஐ கூறுகிறது. ஜாஸி தவிர மேலும் 3 பேரை அது தேடி வருகிறது. இந்த மூன்று பேரும் ரசாயானப் பொருட்களைக் கடத்தி வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அகமது அப்சாலி என்ற இமாம் ஒருவரை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஒபாமா நியூயோர்க் வரும்போது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
Ler Mais

அதிபர் ஒபாமா நடனம்

அதிபர் ஒபாமா ஒபபாமாவை நடனம் ஆடவைத்த நங்கை
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010