150 மில். ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாக கே.பியை மேற்கோள் காட்டி திவயின தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கோரிய 150 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உலங்கு வானுர்தியின் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட 53 வகையான ஆயுதங்களை பிரபாகரன் கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆயுதக் கப்பல் காலம் தாழ்த்தி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் சென்றதாகவும் இதனால் அவற்றை கடலில் வீசிய எறிய நேர்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த ஆயுதங்ளை கொள்வனவு செய்வதற்காக பணம் மலேசியா வங்கி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளின் போது அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக