JKR. Blogger இயக்குவது.
இந்தோனேஷியாவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேஷியாவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

படகை தீ வைத்து எரிக்கப்போவதாக இலங்கை அகதிகள் அச்சுறுத்தல்


இந்தோனேஷியாவில் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை படகு மக்கள் தாங்கள் கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் தங்கள் படகை தீ வைத்து கொளுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர் என இந்தேõனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி கிட்டுமா? கிட்டாதா என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்துள்ள இவர்கள் தற்பொழுது தங்களுக்கு அனுமதி கிடைக்காது போனால் படகை கொளுத்துவதைத் தவிர வேறு வழி இல்லையென கூறியுள்ளதாக மனித உரிமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலிருந்தும், கிறிஸ்மஸ் தீவை நோக்கி 30 அடி நீளமான மரக் கப்பலொன்றில் இம்மாத ஆரம்பத்தில் சுமார் 260 அகதிகள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தோனேஷிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் அவர்களின் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மெராக் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவர்களுக்குத் தேவையான உணவுகள், மருந்து வகைகள் என்பன சர்வதேச அமைப்பொன்றினால் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த படகு மக்கள் படகை கைவிட்டு தற்காலிக குடியிருப்புகளுக்கு வருவதற்கு சம்மதிப்பார்களேயாயின் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுமென சட்ட மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் அதிகாரி பொப்பி புடியஸ்வத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, படகிலுள்ள பெரும்பாலானவர்கள் சுவாசித்தல் மற்றும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் படகுக்குள் சனநெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அகதிகள் இந்தோனேஷியா கடற்கரைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் குறித்து இந்தோனேஷியாவே கவலை கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ler Mais

சட்டவிரோத குடியேற்றவாசிகளை இந்தோனேசியாவில் இருந்து திருப்பியழைக்க ஏற்பாடு


இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கையர்களையும் விடுதலை செய்து இலங்கைக்கு திருப்பி அழைத்து வருதவற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் குறித்த இலங்கையர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டவேளை இவர்களை இந்தோனேசியா கடற்படை மறித்து வைத்துள்ளது மேலும் இவர்கள் தமிழில் உரையாற்றும் போது கைதான 260பேரும் இலங்கையர்கள் என இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இந்தோனேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் பற்றிய விபரங்களை திரட்டவும் இவர்களை விடுவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Ler Mais

அவுஸ்திரிலியாவிற்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பப்பட்டு இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்..


மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரிலியாவிற்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பப்பட்டு இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளன புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனின் நேரடி கண்கானிப்பின் கீழ் செயற்பட்ட புலிகளின் கப்பல்களுக்கு பொறுப்பான பிரித்தானியா பிரஜையான சங்கர் மற்றும் நோர்வே பிரஜையும் இலங்கை தமிழருமான ஸ்டிபன் ராஜா என்று அழைக்கபடும் சோதி மற்றும் ஜேர்மனிய பாபு பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன் மற்றும் மலேசியாவில் உள்ள கண்ணன் மற்றும் டேனியல் புலிகளின் செயற்பாட்டாளாரும் மலேசியாவில் வசிப்பவருமான ரொனால்ட் அல்லது சுகு இந்தோனிசியாவில் உள்ள பாபு மற்றும் மதி ஆகியோர் இக்கப்பல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. மோகன் தற்போது இந்தோனிசியாவில் பதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது ஏனையோர் மலேசியாவில் வசித்து வருவதாகவும் இதில் ரொனால்ட் அல்லது சுகு என்பவர் சர்வேதேசரீதியாக புலிகளின் பணத்தினை கையாள்பவர் எனவும் இவர் மலேசியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றில் புலிகளின் பணத்தில் வாழ்ந்து வருபவர் எனவும் மலோசியாவில் அதிவிலைகூடிய பெறுமதிமிக்க வாகனத்தில் வலம் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.

இதில் சோதியும் ரொனால்ட் அல்லது சுகு வன்னிமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவிற்க்கு அனுப்புவதற்க்கு கப்பல் வாங்க வேண்டும் என கனடாவில் மூன்று லட்சம் டொலர்களை சேகரித்து அதில் 35.000 டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத படகு ஒன்றினை வாங்கி அதில் 30 புலிஉறுப்பினர்களையும் அத்தோடு ஏனைய 230பேரிடம் 15.000 டொலர்கள் வீதம் பெற்றுக் கொண்டு அப்படகில் அனுப்பி வைத்த படகை தற்போது இந்தோனிசியா கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது. இதன் ஊடாக அம்மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதன் மூலம் அம்மக்களை பலிகொடுக்கவும் துணிந்துள்ளனர்.

ரொனாலட் சோதி போன்றோர் மலேசியாவில் பயங்கரவாத பாதளாகுழுக்கள் போன்று செயற்படுவதாகவும் மலேசியாவிக்கு செல்லுகின்ற தமிழ் செல்வந்தர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தியும் மிரட்டியும் பணம்பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிய வருகிறது அண்மையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகனை கடத்தி மூன்று மில்லியன் டொலர்களை வழங்கியபின் அவர் விடுவிக்கபட்ட சம்பவமும் குறிப்பிடதக்கது.

இக்குழுவினர் சட்டத்திற்கு முரணான வகையில் புலிகளின் பெயரை அல்லது தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி பலகோடி டாலர்களை கொள்ளைலாபமாக பெற்று வருகின்ற போதிலும் அப்பணத்தினை பாதிக்கப்பட்ட புலிஉறுப்பினர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது போராட்டத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கோ செலவழிப்பதுமில்லை மாறாக தாங்களின் தனிப்பட்ட உல்லாச வாழக்கைக்கே செலவழிக்கபடுகிறது என்பதும் குறிப்பிடதக்கது இவர்களின் நிழற்படங்களை இணையதளம் வெகுவிரைவில் வெளியிட உள்ளது.
நன்றி.. ரிபிசி வானொலி செய்திப் பிரிவு –லண்டன்
Ler Mais

இந்தோனேஷியக் கப்பலில் இலங்கைத் தமிழர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்:இருவர் வைத்தியசாலையில்


இந்தோனேஷியக் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கப்பலில் உள்ள 250க்கும் அதிகமான தமிழர்கள் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அவர்களை ஏற்க ஆஸ்திரேலிய மறுத்து வருகின்ற நிலையில் இந்த உண்ணாவிரதம் தொடர்கிறது.

பிந்திக் கிடைத்த செய்தி

உண்ணாவிரதப் போராட்டத்தில், ஈடுபட்டுள்ள இலங்கையர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் கிடைத்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர், அவர்களுடன் இணக்கப்பாடு ஒன்றை காண்பது தொடர்பில் இந்தோனேஷிய கடற்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதற்கிடையில் கப்பலில் உள்ள அகதிகள் தற்போது இரண்டாகப் பிரிந்துள்ளதாக இந்தோனேஷியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்கேனும் ஓர் இடத்தில் குடியமரும் திட்டத்துடன் ஒரு குழுவும், வாக்குவாதங்களில் ஈடுபட்டு அவுஸ்திரேலியா செல்லும் திட்டத்தைத் தொடர விரும்பும் இன்னொரு குழுவுமாக அவர்கள் பிரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாக இந்தோனேஷியாவின் பான்டென் மாகாணத்தின் குடிவரவுத் துறை தலைமை அதிகாரி ஹரி புருவான்டோ தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு ஆஸி. .தஞ்சமளிக்க வேண்டும் : ஐநாஅகதிகள் பேரவை

தமது நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அகதிகளை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பில் ஒரு நாடு என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவை தெரிவித்துள்ளது.

தற்போது இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கையர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

அதன் பிரதிநிதி ரிச்சட்டவல் கூறுகையில்,

"இந்தோனேஷிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ள இலங்கையர்களின் விபரங்களைத் திரட்டுமானால் அவர்களுக்கு உதவி செய்ய ஐக்கிய நாடுகள் தயாராக இருக்கின்றது.

அகதிகள் கோரும் பட்சத்தில் அவர்களை மீள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும். அவுஸ்திரேலியாவிடம் அவர்களில் சிலரை ஏற்க கோரப்படும்.

அதேவேளை, குடிவரவு கொள்கையின் தெளிவின்மை மற்றும் இலகு தன்மை என்பன அகதிகளின் வருகையை அதிகரிக்கலாம்.

அவுஸ்திரேலியாவே அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்கும் நாடாக நான் கருதுகிறேன். எனினும் அரசியல் தஞ்சம் வழங்கும்போது அவதானமாக இருக்கவேண்டும்.

தற்போது இந்தோனேஷிய கடற்கரையில் நங்கூரமிட்டிருக்கும் கப்பலிலுள்ள இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும். அதுவே அவர்களுக்கான பாதுகாப்பாகவும் இருக்கும்" என்றார்.
Ler Mais

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்


earthquake_300இந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது.

இது மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010