JKR. Blogger இயக்குவது.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவானதன் மூலம் இந்தியா இலங்கை இடையே புதிய உறவுப்பரிமாணம். - நிரூபமா தெரிவிப்பு.


கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றததைத் தொடர்ந்து இந்திய இலங்கைக்கு இடையிலான உறவு புதிய பரிமாணத்தின் கீழ் சக்திமயப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.
Leia Mais

வடக்குக் காஷ்மீரில் பனிச்சரிவு : 11 இராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு


வடக்குக் காஷ்மீர் கிலாங்மார்க் எனும் இடத்தில் இன்று பிற்பகலில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான இராணுவ வீரர்கள் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது. 11 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

400க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இப்பனிச் சரிவில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Ler Mais

ஒரு லட்சம் தொழிலாளரின் தொழிலை பாதுகாக்க அரசின் மாற்றுத் திட்டம் என்ன?


ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிகின்றது. அவ்வாறெனின் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. இது தொடர்பில் தொடர்ந்து கூறியதாவது

"ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை நிறுத்துவதற்கு ஒன்றியம் தீர்மõனித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது மிகவும் அவதானமான நிலைமை என்பதனை குறிப்பிடுகின்றோம். இதன் மூலம் எமது நாட்டின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்.

இவற்றையெல்லாம் விட முக்கிய விடயமாக சுமார் ஒரு இலட்சம் பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலைமை காணப்படுகின்றது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நாங்கள் இலகுவில் கருதிவிட முடியாது.

அந்தவகையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை எமது நாடு இழக்கும் பட்சத்தில் குறித்த ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற மாற்றுத்திட்டம் என்னவென்று பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் வினவுகின்றோம். ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்பை பாதுகாப்பதற்கான அரசின் திட்டம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.
Ler Mais

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே கட்சிகளுக்கிடையிலான தேர்தல் பணிகள் சூடுபிடிப்பு


பாராளுமன்றம் கலைக்கப்படாதிருக்கின்ற நிலையில் அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் பிரதான கட்சிகளிடையே சூடு பிடித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதானமாக கொண்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி. ஆகிய முன்னணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்று வியூகம் அமைத்து வருகின்ற அதேவேளை வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும் முனைப்பான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளன.

இதேவேளை கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சத்தியாக்கிரக எதிர்ப்புக் கூட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ஆளும் கட்சி

அந்த வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு தமது முன்னணியூடாக களமிறங்கும் வேட்பாளர்களைத் தெரிவதற்கென ஒரு குழுவும் அதே நேரம் வேட்பாளர் தெரிவில் சிக்கல் நிலை தோன்றும் பட்சத்தில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜோன் செனவிரட்ண, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரைக் கொண்ட வேட்பாளர் தெரிவு அதிகாரிகள் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் மூன்றாக பிரித்து அதனடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று கூடுகிறது

இதன்படி கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றும் நாளையும் கூடுகின்ற மேற்படி தெரிவுக் குழுவினூடாக ஆளும் கட்சி சார்பிலான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பிரதமர் தலைமையில்

இதேவேளை பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க தலைமையில் பஷில் ராஜபக்ஷ எம்.பி. அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் டளஸ் அழகப் பெரும ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவிடம் வேட்பாளர் தெரிவு தொடர்பில் குளறுபடிகள் அல்லது பக்கச்சார்பு இடம்பெற்றிருப்பின் முறையிட்டு அக்குழுவினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வேட்பாளர் தெரிவு நடவடிக்கைகளை நாளை மறுதினம் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.

கட்சியின் நாடு முழுவதிலுமுள்ள தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்களையும் அதன் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு அழைத்திருக்கின்ற கட்சியின் உயர் மட்டம் அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய கலந்துரையாடலுக்கு அனைத்து அமைப்பாளர்களும் இதில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் ஒதுக்கப்பட வேண்டியிருப்பதால் அது தொடர்பிலும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்க் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது 16 அரசியல் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற அதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவை யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிலும் சில சிக்கல்கள் தோன்றியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

ஜே.வி.பி. மந்திராலோசனை

இது இவ்வாறிருக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பில் மந்திராலோசனைகள் இடம்பெற்று வருவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது இணைந்திருந்த எதிர்க் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பிலும் அதே நேரம் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பிலும் இங்கு கட்சிகளிடையே சிறிதளவான முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் எனினும் இந்த முரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு எட்டப்படும் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தெரிய வருகின்றது.

தே.சு.மு. 19;ஹெல உறுமய 5

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் தமது வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பில் தீர்மானித்துள்ளன.

இதன்படி தேசிய சுதந்திர முன்னணி வடக்கைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரதேசங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ள அதேவேளை தமது கட்சியின் சார்பில் 19 பேரை வெற்றிலைச் சின்னத்தில் களமிறக்குவதாகவும் அது தொடர்பிலான பெயர்ப் பட்டியலை ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது.

அதே போல் ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரையில் தமது கட்சி கொழும்பு உட்பட 5 மாவட்டங்களில் மாத்திரமே 5 வேட்பாளர்களை களமிறக்குவதாகவும் ஏனைய பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான நிதி வசதிகள் இல்லையென்றும் அக்கட்சியின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்கவில்லை

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து மலையக மக்கள் முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரே அது குறித்து சிந்திக்க வேண்டியிருப்பதாகவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சந்திரசேகரனை தேர்தலில் போட்டியிட வைப்பதா என்பது தொடர்பிலும் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா. வெற்றிலையில்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடு முழுவதிலும் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.

ஐ.ம.மு.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்பதால் அது யானைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் சகல பிரதேசங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் களமிறங்குவர்.
Ler Mais

இளம் டென்னிஸ் வீராங்கனை மானபங்கம்: முன்னாள் டி.ஜி.பி., க்கு கத்திக்குத்து : கோர்ட்டில் பரபரப்பு


சண்டிகார்: அரியானா முன்னாள் டி. ஜி.பி.,ரத்தோருக்கு சண்டிகார் கோர்ட்டில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவரது தாடை கிழிந்தது. இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர்; இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை மானபங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு. மானபங்கம் செய்ததால், அவமானம் தாங்காமல், ருச்சிகா, மூன்றாண்டுகளுக்கு பின், தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில், சமீபத்தில் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், இவர் மீது புதிதாக சில வழக்குகளை அரியானா போலீசார் தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, சண்டிகார்‌ கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ரத்தோர். மேலும் சில வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு தொடரப்ப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணை இன்று ( திங்கட்கிழமை ) நடக்கவிருந்தது. இந்த விசாரணைக்காக கோர்ட்டுக்கு காரில் இருந்து இறங்கி கோர்ட் அணிந்தபடி ரத்தோர் வந்துகொண்டிருந்தார். இந்நேரத்தில் பாய்ந்து வந்த ஒரு இளைஞன் இவரது முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். பின்னர் கையில் இருந்த கத்தியால் தாடையை குத்தி கிழித்தான். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இளைஞர் கைது : கத்தியால் குத்தியதும் தாடையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட கையில் இருந்த கர்ச்சிப்பை கொண்டு துடைத்தபடி காரில் ஏறி அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து ரத்தோரை குத்தியவர்களை அருகில் இருந்த போலீசார் மற்றும் சிலர் சேர்ந்து இந்த இளைஞரை பிடித்து கொண்டு சென்றனர். அப்போதும் அவர் ரத்‌தோருக்கு எதிராக கோஷம் எழுப்பினான்.
Ler Mais

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு


வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார்.

தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யெமெனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

2008 / 2009 ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார்.

ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சவரம்பை உயர்த்துதல்

பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது. ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து முக்கியமாக வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன:

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ஈ (G C S E) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள்.

* 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.
Ler Mais

நாளை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏபரல் 8 இல் தேர்தல்:அமைச்சர் ராஜித சேனாரட்ண தகவல்


பாராளுமன்றம் நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும். ஜனாதிபதி தேர்தலில் போன்றே பொதுத் தேர்தலிலும் நாங்கள் வெற்றியடைவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ண இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம்.

அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.

முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் எமது வேலைத்திட்டங்களை அங்கீகரித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிலும் மக்கள் எங்களை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அந்தவகையில் பாராளுமன்றம் நாளை மறுதினம் 9 ஆம் திகதி கலைக்கப்படும். இது நம்பகரமான தகவலாக உள்ளது. அதேபோன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும். மேலும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக தெரிகின்றது. எனவே இந்த தேர்தலில் கூட்டமைப்பு சிந்தித்து செயற்படும் என்று நம்புகின்றோம்.

வடக்கு கிழக்கு மக்கள் நாட்டின் தேசிய அரசியல் செயற்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே வடக்கு கிழக்கு மக்கள் தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
Ler Mais

தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவுச் சதி தீட்டப்படுகிறது:வினோநோகராதலிங்கம்


எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வட-கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து , நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு,ஓரணியாக மீண்டும் இணைந்து கொண்டுள்ளதை ஜீரணிக்க முடியாதவர்களும், கூட்டமைப்புடன் தமிழ் மக்கள் சங்கமித்துப் போவதை தடுக்க முனைபவர்களுமே என்ன விலை கொடுத்தேனும் இவ் இரகசிய திட்டத்தை அரங்கேற்ற முயல்கின்றனர்.

இதன்படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வட-கிழக்கின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு ,மாவட்டங்களில் குறைந்தபட்சம் தலா மூன்ரு சுயேட்சை வேட்பாளர் குழுக்களை நிறுத்துவதன் மூலம் தமிழ் பிரதிநித்துவத்தை தகர்க்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எமது மக்களில் சிலரை பலிக்கடாவாக்கி சிலநூறு அல்லது சில ஆயிரம் வாக்குகளை பிரித்தெடுப்பதன் மூலம் தமிழ் நாடாளுமன்ற அங்கத்துவத்தினை குறைக்கலாம் என்ர இலாப நட்டக் கணக்கு போடப்படுகிறது.

இதற்காக எம்மந்த்தியில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து ஆட்சேர்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றோம்.

இதற்காக சாதி, மத, பிரதேச உணர்வுகள் ஊட்டப்படுகின்றன.எம்மத்தியில் இலகுவாக ஏமாறக்கூடிய சிலரை வளைத்துப்போட்டு தமது சுயநல அரசியல் இலக்கினை எட்டுவதற்கு இவர்கள் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள்.

தமிழ் மக்களினதும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் பலத்தையும், ஒற்றுமை உணர்வையும் உடைத்தெறிய எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் தெரிந்தோ தெரியாமலோ நாம் துணை நிற்கக் கூடாது

இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,இளைஞர்கள், விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும்.வரவிருக்கும் புதிய அரசுடன் பேரம் பேசக் கூடிய சம அரசியல் பலம் எம்மிடம் இருக்க வேண்டும்.

இதை உணர்ந்து விட்டுக்கொடுப்புகளுடன் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட காலம் கனிந்துள்ளது.தமிழ் மக்கள் ஒன்றாக, ஒரே சிந்தனையுடன் இருக்கும்போது தமிழ் இயக்கங்கள், கட்சிகள் பிரிந்து நின்று ஒன்றுமே ஆகிவிடப்போவதில்லை.தலைமைத்துவத்தை வழங்க தகுதியற்றவர்களாகிவிடுவோம்.

ஆயுதபோராட்டத்தில் தோல்வியடைந்த நாம் அரசியல் போராட்டம் ஒன்றில் தோல்வியை சந்திக்கக் கூடாது.எம்மிடையே ஒற்றுமை குலைந்து போனால் இருப்பதையும் நாம் இழந்துவிடுவோம்.கடந்துபோன கசப்பான படிப்பினைகளை உணர்ந்து எந்த சதி முயற்சிகளையும் முறியடிக்க எமது அரசியல்பலத்தை நிலைநிறுத்த கடுமையாக நாம் உழைக்க வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ler Mais

ம.ம.முன்னணிக்குள் பிளவு : ஜ.ம.முன்னணியில் பாரதிதாசன் இணைவு


மலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும் சிரேஷ்ட உறுப்பினருமான பாரதிதாசன் சுமார் 2000 ஆதரவாளர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளார். கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த அமைச்சர் சந்திரசேகரனின் மறைவையடுத்து அவரது மனைவி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனால் கட்சியின் சில உறுப்பினர்களுக்கிடையே கருத்து முரண்பாடு நிலவி வந்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் சுமார் 2000 பேர் வரையிலான ஆதரவாளர்களுடன் பாரதிதாசன் தமது கட்சியில் இணைந்து கொண்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பாரதிதாசனை கட்சியின் உபதலைவர்களுள் ஒருவராக இணைத்துக் கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று மாலை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Ler Mais

செய்தியறிக்கை


இரானின் அணுவசதிகள்
இரானின் அணுவசதிகள்

இரானுக்கு மேற்கத்தைய நாடுகள் கண்டனம்

இரானிய அரசு யூரேனியம் செறிவூட்டலை மிக உயர்ந்த தரத்திற்கு மேற்கொள்ளவிருப்பதாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் குறித்து மேற்கத்தைய நாடுகள் மிகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இதற்கு அடுத்த கட்டம் இரான் அணு ஆயுதம் தயாரிப்பது தான் என்று மேற்குலக அரசுகள் கருதுகின்றன. இரானின் நடவடிக்கையை பிரிட்டனும் ஜெர்மனியும் கண்டனம் செய்துள்ளன.

இரான் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் மீது ஏற்றுமதி தடைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக நாடுகள் இனி முயல வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க உதவியுடன் நடத்தப்படும் பாரசீக மொழி வானொலியுடன் தொடர்புடையவர்கள் என்றும், அமெரிக்காவுக்கு ஒற்றர்களாக வேவு பார்த்தவர்கள் என்றும் இரானியர்கள் சிலரை இரான் அரசு கைது செய்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் படைக்கு கட்டாய ஆள் சேர்ப்பு யோசனை - அதிபர்

ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்
ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய்

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை ஆப்கான் படைகளே பொறுப்பேற்க்கக்கூடிய முறையில் ராணுவ சேவைக்கு கட்டாய ஆட் சேர்ப்பதன் மூலம் படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி தாம் ஆலோசித்து வருவதாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் உலக பாதுகாப்பு அதிகாரிகள் மாநாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த அமெரிக்காவின் தலைமையிலான படைகள் ஆயத்தம் செய்து வரும் வேளையில் கர்சாய் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தென்பகுதியில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் கிளர்ச்சியாளர்களுடனான போர் ஆரம்பித்த பின்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே, தற்போது நடத்தப்படவுள்ள தாக்குதல் தான் மிகப்பெரியதாக இருக்கும் என்று நேட்டோ தளபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.


இராக்கில் ஷியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஷியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஷியா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இராக்கில் தடை செய்யப்பட்ட பாத் கட்சியுடன் தொடர்புடையதாக கருதப்படும் வேட்பாளர்களை தேர்தலில் இருந்து ஒதுக்கி வைக்கும் தடை நீக்கப்பட்டதை கண்டித்து இராக்கின் ஷியா முஸ்லிம் பிரிவு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இந்த பிரச்சனைக்கான தீர்வை காணாவிட்டால், தேர்தல் பிரச்சாரம் மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.


'பிரையஸ்' கார்களை டோயோட்டா திரும்ப பெறலாம்

'பிரையஸ்'
'பிரையஸ்'

ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தயாரித்து வரும் அதன் நட்சத்திர தயாரிப்பான ‘பிரையஸ்’ காரில் பிரேக் சாதனத்தில் தவறு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிரையஸ் கார்கள் மீளப் பெறப்படுவது பற்றிய அறிவித்தல் இவ்வாரம் வெளியிடப்படும் என்று ஜப்பானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 நாடுகளில் சுமார் 3 லட்சம் டோயோட்டா ‘பிரையஸ்’ கார்கள் விற்கப்பட்டுள்ளன. டோயோட்டா நிறுவனம் இது பற்றி ஏற்கனவே ஜப்பானில் உள்ள கார் விற்பனையாளர்களுக்கு அறிவித்திருப்பதாகவும், ஜப்பான் அரசாங்கத்துடன் பேசிவிட்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை டோயோட்டா நிறுவனம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியரங்கம்
இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டாலர் இராணுவக் கடனுதவி

இலங்கை ஜனாதிபதியாக இரண்டாவது முறை தேர்தெடுக்கப்பட்ட பிறகு தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள், இந்த பயணத்தின் போது 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் நடைபெற்ற போர் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் பின்புலத்தில் போருக்கு பின்னர் இந்த இராணுவ உடன்பாட்டின் நோக்கம் என்ன என்று இலங்கையிலிருக்கும் இராணுவப் பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார்.

அதில் தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது 300 மில்லியன் டாலர்கள் கடனுக்கான உடன்பாடுதான் என்றும் அந்தக் கடனுதவி ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள், அதாவது புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், மேம்படுத்தும் வகையிலேயே வழங்கப்படவுள்ளது என்றும் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


ஆவணங்களை காண்பித்து வாகனங்களை மக்கள் திரும்ப பெறலாம் - யாழ் ஆயர்

யாழ் ஆயர் தாமஸ் செளந்திரநாயகம்
யாழ் ஆயர் தாமஸ் செளந்திரநாயகம்

இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அந்தப் பகுதிகளுக்கு போருக்கு பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இராணுவத்தின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் கூறினார்.

இந்த வாகனங்கள் தற்போது அந்தப் பகுதி அரசாங்க அதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியும் என இராணுவத்தினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, முதற் தடவையாக அவர் யுத்தம் நடைபெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தமிழகத்தில் 'கேரம்'

சென்னை
சென்னை

கேரம் விளையாட்டில் இந்தியா உலக சாம்பியனாக இருக்கும் நிலையில் தமிழகம் இந்த விளையாட்டில் முன்ணணியில் உள்ளது. சென்னையில் குடிசைப்புறங்கள் மற்றும் ஏழ்மையான இடங்களில் மிக அதிக அளவில் கேரம் விளையாடப்படுகிறது.

இந்த விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடங்களை பெற்றுள்ளனர். இந்த விளையாட்டு தமிழகத்தில் பிரபலமாக இருப்பதன் காரணம், இதை விளையாடுபவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்கிறார் நமது தமிழகச் செய்தியாளர் டி.என். கோபாலன்.

Ler Mais

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்


தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார்.
ஒருவருட புனர்வாழ்வு திட்டத்தின் முடிவின் பின்னர், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்ற முன்னாள் போராளிகளில் 40 சதவீதமானவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 11ஆயிரம் போராளிகள் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Ler Mais

ஆளும் கட்சியிலோ,எதிர்கட்சியிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை:சிவாஜிலிங்கம்


எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க் கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில்," ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் . எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளவுள்ளேன்.

இதில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவேன். பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான எனது நிலைப்பட்டை இவ்வாரம் அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.
Ler Mais

ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு : மட்டு. முதல்வர்


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து எமது இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன்.

அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தீர்மானங்களை கருத்திற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்"என்றார்.
Ler Mais

வவுனியாவில் 15 ஆம் திகதி மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்


மீள்குடியேற்றப் பணிகள் வவுனியாவில் மீண்டும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.இத்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் படுவோர்க்கென 8 ஆயிரத்து 900 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கமைய ஐரோப்பிய ஆணைக்குழு 3 ஆயிரத்து 900 வீடுகளையும் உலக வங்கி 5 ஆயிரம் வீடுகளையும் அமைத்துக்கொடுக்க முன்வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 75 ஆயிரம் பேரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையிலுமே மீளக் குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஏற்பட்ட தாமதத்தினால் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீள்குடியேற்றப் பணிகள் கடந்த 02 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 02 ஆம் திகதி பூநகரிக்கு ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டம் கரச்சி பிரதேசத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கியிருக்கும் 300 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப் படவிருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
Ler Mais

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்


ஊடக அடக்கு முறைக்கு எதிராக இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு, உட்பட ஊடக அமைப்புக்கள் பலவும் இணைந்தே இநத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

"லங்கா ஈநியூஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் பிரகீத்தை விடுதலைசெய்" "லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் சந்தன சிறமல்வத்தையை விடுதலைசெய்" "ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்து" "சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்து" போன்ற கோஷங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதைக் காணமுடிந்தது.

அண்மைக்காலத்தில் கொழும்பில் ஊடகவியலளார்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர ஊடவியலளார்களுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் தர்மசிறி லங்கா பேலி கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவந்து ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட அரசாங்கம் இடமளிக்க வேண்டும்" எனதெரிவித்தார் .
Ler Mais

ஷேவாக்கின் அதிரடி துடுப்பாட்டத்தினால் வலுவான நிலைக்குச் செல்லும் இந்தியா


தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 558 பெற்று தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஹசிம்அம்லா 253 ஓட்டங்களையும் காலிஸ் 173 ஓட்டங்களையும் எடுத்தனர். சகீர்கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை எடுத்து இருந்தது. காம்பீர் 12 ஓட்டங்களுடனும் ஷேவாக் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார்கள்.

தென் ஆபிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திணறியது. 56 ஓட்டங்கள் பெறுவதற்க்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது தொடக்க வீரர் கம்பீர் 12 ஓட்டங்களுடன் மார்கல் பந்து வீச்சில் பெவிலியன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் வந்த தமிழக வீரர் முரளி விஜய் 4 ஓட்டங்கள் ஆட்டம் இழந்தார். வங்காளதேச தொடரில் முத்திரை பதித்த டெண்டுல்கர் இன்று பிரகாசிக்க வில்லை. அவர் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார். விஜய் டெண்டுல்கர் ஆகியோரது ஆட்டமிழப்பைத் தெடர்ந்து ஜோடி சேர்ந்த பத்ரி நாத் செவாக் நிதானமாக நின்று விளையாடி வருகின்றனர். என்பதுடன் ஷேவாக் சதம் ஒன்றையும் பூர்த்தி செய்துள்ளார்.
Ler Mais

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளராக அனுஷ பல்பிட்ட பதவியேற்பு


தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பல்பிட இன்று தனது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான நிகழ்வு கொழும்பிலுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்த ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்கியல் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றுள்ள அனுஷ பல்பிட்ட இலங்கை நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் பெற்றுள்ளவர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பதிவியேற்றுள்ள அனுஷ பல்பிட்ட தொடர்ந்தும் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ler Mais

ஏழையைப் போல இருங்கள்: இந்திய மாணவர்களுக்கு ஆஸி. அறிவுரை


மெல்போர்ன்: தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏழைகளை போல இருங்கள். பணம், நகை உள்ளிட்டவற்றை வைத்திருப்பது போல காட்டிக் கொள்ளாதீர்கள், அடக்கம், ஒடுக்கமாக இருங்கள் என்று இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாவதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதில் பெரும்பாலானவை இரவு நேரத்தில் தனியாக செல்லும் மாணவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் தான் நடப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற தாக்குதலில் இருந்து இந்திய மாணவர்கள் தப்பிக்க, விலை உயர்ந்த பொருட்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஏழைகளைப் போன்ற தோற்றத்துடன் வளைய வருமாறு விக்டோரியா மாகாண போலீஸார் இந்தியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இதுகுறித்து விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் சிமோன் ஓவர்லேண்ட் இதுபற்றி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

இந்திய மாணவர்கள் தங்கள் மீதான வன்முறை யை தவிர்க்க, தங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஏழைகளைப் போல காட்டிக்கொள்ளுங்கள்.

விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் உபகரணங்கள், ஐபாட், கடிகாரம், ஆபரணங்கள் போன்றவற்றை வெளியே தெரியும் வகையில் வைத்திருக்காதீர்கள். இதன் மூலம் ஓரளவு வழிப்பறி போன்ற வன்முறை தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

நேரம் கடந்த பயணங்களை தவிர்க்க எங்கு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அங்கேயே தங்கிவிடலாம். சர்வதேச அளவில் பெரிய இனப் பிரச்னைகளை கிளப்பும் இந்த வன்முறை தாக்குதல்கள் சமாளிக்க மாணவர்களும் தங்கள் தரப்பில் சில முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

தேர்தல் காலத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது


கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது சில பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்றிய விதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விரிவான விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள இடமாற்றங்களின் போது அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. சில பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வுப் பிரிவு மற்றும் அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Ler Mais

பிரபாகரன் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டு பிடிப்பு ஏராளமான ஆயுதங்கள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


புலித் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருந்த ரகசிய இடத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தது அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என கருதப்படும் ஆறு பேர் தடுப்பு முகாம்களில் இருந்து சமீபத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வன்னி பகுதியில் இலங்கையின் பாதுகாப்பு விசேட பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் பிரபாகரன் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் சீடிக்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவை எனவும் தற்போது நடந்து வரும் விசாரணைக்கு இது பெரிதும் பயன்படும் என பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை படையினர் அணியும் உடைகள் கண்ணி வெடிகள் 300கிலோ வெடி மருந்துகள் கைக்குண்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடைசி கட்ட மோதல்களின்போது பிரபாகரன் அவ்விடத்தில்தான் பதுங்கியிருந்ததாக விசாரணக்குட்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனுக்கு நெருக்கமான புலி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Ler Mais

புலிகளின் ஆயுத விநியோகஸ்தரான யாழ்.வாசி கைது.


இரு கொரிய நாட்டவர்களுடன் இணைந்து சீனாவிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கருணாகரன் என்ற நபரை இலங்கை குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்

கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட கருணாகரன் சீனாவிடமிருந்து புலிகளின் கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்றும் அவரை தொடர்ந்து விசாரணை செய்து கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் நீதவானிடம் தெரிவித்த குற்றப்புலனாய்வு துறையினர் சந்தேகநபரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்கள். சந்தேகநபரை எதிர்வரும் 26ம் திகதிவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளித்த நீதவான் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Ler Mais

ஜனாதிபதிக்கு கௌரவ கலாநிதி பட்டம். ரஷ்ய பல்கலைக்கழகம் வழங்கியது.


மொஸ்கோவில் அமைந்துள்ள உலகப் பிரசித்திபெற்ற ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவையொட்டி மொஸ்கோ கிரம்லின் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதிக்கு மேற்படி உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். இரு தரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமையும் இந்த பேச்சு வார்த்தைகளையடுத்து இலங்கை ரஷ்யா இடையே முக்கிய சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் ஜனாதிபதியுடன் ரஷ்ய சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஊடகங்களுக்கு தகவல் தருகையிலே 30 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதியின் ரஷ்ய விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவு மேலும் வலுப்பெறும் என தெரிவித்துள்ளார். இதுதவிர ரஷயாவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான விளாடிமிர் புட்டினையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய வர்த்தக சமூகத்துடன் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து அவர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Ler Mais

"ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ரத்துச் செய்வதுகுறித்து முறையான தீர்மானம் எடுக்கப்படவில்லை''-ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர்


இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் முறையான தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அதற்கு இம்மாத இறுதிவரை அவகாசம் உள்ளது எனவும் பெல்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் லக்ஸம்பேர்க்கிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் நேற்று மாலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில், ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற வர்த்தக சலுகைகளை முடிவுறுத்துவது சாதாரண இயந்திரம் போன்ற வேலையல்ல; அதனை தன்னிச்சையான முறையில் செய்து கொள்ளலாம். ஆனால் அதனைச் செய்யும்போது சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரிவுகள் குறித்த புரிந்துணர்வுடன் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

இலங்கை தூதுவர் கூறுகையில், இந்த விவகாரம் சம்பந்தமாக பலமுறை ஐரோப்பிய ஆணைக்குழுவின் கவனத்துக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளதுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து இலங்கை பெறும் தகுதி குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் தூண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Ler Mais

நடுவானில் விமானங்கள் மோதல் அமெரிக்காவில் மூன்று பேர் பலி


நியூயார்க்:அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாயினர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் பவுல்டர் விமான நிலையத்திலிருந்து ஒரு இருக்கை கொண்ட விமானம், மூன்று பயணிகளை கொண்ட கிளைடர் விமானத்தை இழுத்து கொண்டு நேற்று முன்தினம் பறந்தது.

பவுல்டர் நகரத்தின் வடக்கு பகுதியில் இந்த விமானங்கள் சென்று கொண்டிருந்த போது, நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் திடீரென வந்து ஒரு இருக்கை கொண்ட விமானத்தின் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஒரு இருக்கை மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட விமானங்கள் வெடித்து சிதறின.இந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். கிளைடர் விமானத்தில் இருந்த பைலட்டும், ஒரு பெண் பயணியும் அவரது குழந்தையும் பாரசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கி விட்டனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Ler Mais

ஆபாச வீடியோவில் காத்ரீனாவின் தங்கை இசபெல்?


காத்ரீனா கைபின் தங்கை இசபெல் போன்ற ஒரு பெண் தோன்றும் ஒரு ஆபாச எம்எம்எஸ் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆபாச எம்எம்எஸ்ஸில் உடலுறவு உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள பெண் அப்படியே காத்ரீனாவின் தங்கை இசபெல்லைப் போலவே உள்ளார். 10 நிமிடம் இந்த வீடியோ ஓடுகிறது. யூடியூபில் இது லீக் ஆகியுள்ளது. அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண் யார் என்று தெரியவில்லை. இந்த ஆபாச வீடியோ இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பரபரப்பாக உலா வந்து கொண்டுள்ளது. இந்த வீடியோ குறித்து காத்ரீனாவும் சரி, இசபெல்லும் சரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Ler Mais

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை காண முடியும்-புளொட் சித்தார்த்தன்!


முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில். தமிழ் மக்களை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கு வாக்களித்தார்கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கோ அல்லது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கோ வாக்களித்திருக்கிறார்கள். இந்த இருவரும் தமிழ் தேசியத்தை முற்று முழுதாக நிராகரிப்பவர்கள்.

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அரசின் மீதுள்ள தமது விருப்பு வெறுப்பை காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தார்கள். தேர்தல் அறிவித்ததும் ஒரு பகுதியினர் ஆதரிப்பதற்கும் பெரும்பகுதியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பதற்குமான விருப்பை கொண்டிருந்தார்கள் என்பதனை காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலானவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிந்திருந்தும் எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்று முடிவெடுப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

இடம் பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக அனைத்து கட்சிகளும், சர்வதேசமும் குறுகிய காலத்தில் இது நடைபெறாது என எதிர்ப்புக் குரல்கள் வெளிக்கொணர்ந்த வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களுக்குள் மீள் குடியேற்ற வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று எங்களுக்கு மாத்திரமல்ல இந்திய அரசுக்கும் உறுதியளித்திருந்தார்.

விடுதலைப் புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற சிறார்களை விடுதலை செய்ய வேண்டுமென நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அவர்களது பாதுகாப்பு சோதனைகள் முடிந்தவுடன் பகுதி பகுதியாக விடுதலை செய்யப்படுவர் என எமக்கு உறுதியளித்தார்.

இந்த இரு விடயங்களையும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே செயற்படுத்த ஆரம்பித்தார். இந்த பிரச்சினைகள் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் முக்கியமானதொன்று என நாம் கருதுகிறோம்.

இப்போது செயற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள் ஜனாதிபதித் தேர்தலில் மாறுதல்களையும், கால தாமதத்தையும் அல்லது தடைப்படும் என்று எதிர்பார்க்கின்றபோது அவ்வாறு நடந்து விடாமல் அந்தந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை நாம் எதிர்பார்த்தே ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

ஆகவே பதவியில் இருக்கும் ஜனாதிபதி தமிழ் மக்கள் முகங்கொடுக்கின்ற உடனடி பிரச்சினைகள் (மீள் குடியேற்றம்) அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் அவருடன் பேசி தீர்வினை காணலாம் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.

யார் விரும்புகின்றார்களோ இல்லையோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த ஏழு வருடங்களுக்கு ஜனாதிபதி என்பதே யதார்த்தம்.

விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் ஒரு தீர்வை காண முடியும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
Ler Mais

ரிஎம்விபி கட்சியில் இணையப் போவதில்லை -சிவகீதா அறிவிப்பு!


தாம் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அங்கத்தவர் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணையப் போவதில்லை என மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார். சிவகீதா மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணையப் போவதாக வெளியான தகவல் தொடர்பிலேயே அவர் இந்த பதிலை வெளியிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த போதும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவைப் போல ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி உறுப்பினராகவே இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais

ரிஎம்விபி பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சாத்தியம்..!


எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற அரசியல் பிரதிநிதிகளின் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெரும்பான்மையானவர்கள் கட்சியின் சுயாதீனத் தன்மையை முன்னிலைப்படுத்தி தனித்து போட்டியிடுவதே சாலச்சிறந்தது என கருத்து தெரிவித்ததாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார் எனினும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசாங்கத்தின் முக்கிய தோழமை கட்சியாக உள்ள நிலையில் அதன் சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது எனவே எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள அரசாங்கத்தின் உயர்மட்டங்களுடனான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சந்திப்பின்போது இதுதொடர்பில் கட்சியின் தலைவர் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமளித்து அதன்பின்னர் இறுதிதீர்மானம் மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த முறை பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிடும் நோக்கையே கட்சி கொண்டிருப்பதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கிடையில் இந்த தேர்தலை தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வுக்காகவும் அபிவிருத்திக்குமான நோக்காக கொண்டே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பார்ப்பதாகவும் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
Ler Mais

சக்தி ரிவி சிறீரங்கா பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்ட விடயமாக பிரதான சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை!


சக்தி ரிவி மின்னல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜே.சிறீரங்காவின் பாதுகாவலர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பான பிரதான சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து வெளியேறி மறைந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சரணடைந்தவர் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹற்றன் நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜே.சிறீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Ler Mais

ஈபிஆர்எல்எப் தோழர் இளங்கோ மறைவு!!


கடந்து வந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோ சாவக்கச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ(கணபதிபிள்ளை ரவீந்திரன்) தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர். யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர் அவர். மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை வடிவங்களின் ஊடான பிரச்சாரங்களை தனது சக தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர். வீதி நாடகங்களை நடாத்தியவர். தனது நெஞ்சுக்கு நீதியாக அவர் வாழ்ந்தவர். எமது சமூகத்தின் சராசரி மனிதர்கள் போல் உலகத்தின் ஏதோவொரு மூலைக்குச் சென்று அவர் மிக சௌகரியமாக வாழ்ந்திருக்க முடியும்.

பல்வேறு உடல் உபாதைகள் மத்தியில் துன்ப துயரங்களின் மத்தியில் அவர் நாட்டில் சக தோழர்களுடன் தோழராக வாழ்ந்தவர். 1986 புலிகள் இயக்கம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்த போது தோழர் இளங்கோவும் புலிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அனுபவித்த சித்திரவதைகளும், அவர் காண நேர்ந்த கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. அந்த அனுபவங்களை பல தடவை தனது சக தோழர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவர் அவர். அவரது தோழர்கள் நண்பர்கள் மத்தியில் தோழர் இளங்கோ மிகவும் இனிமையான, பண்புள்ள மனிதராகவே காணப்பட்டார். தோழர் இளங்கோ இருக்குமிடம் எப்போதும் கலகலப்பானதாக இருக்கும். அவருடைய சமூகப் பார்வையில் ஆழமான பொருள் பொதிந்த இயல்பு காணப்படும். ஒரு வசீகரமான மனிதர் அவர். எப்போதும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். ஜனநாயக இடைவெளியை உருவாக்குவது பற்றியும் மக்களின் சுதந்திரமான வாழ்வு பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்.

அவருடைய மனைவியார் சிவசக்தி அவர்களும் அவருடைய சமூக அரசியல் வாழ்வில் இணைந்திருந்தார். தனது சமூக அரசியல் அக்கறைகளுக்கு மத்தியில் தமது பி;ள்ளைகளின் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளிலும் அவர் அக்கறை செலுத்தினார். எப்போதும் சோம்பிக் கிடப்பவரல்ல அவர். உழைப்பின் மகத்துவத்தை அவர் உணர்ந்தவர். சங்கீதம், பாடல்கள், இசை பற்றிய ஞானம் அவருக்கு இருந்தது. இவற்றை இவற்றை நேர்த்தியாக தொகுப்பதிலும் அவர் ஆற்றல் பெற்றிருந்தார்.

அவரது தந்தையார் கணபதிப்பிள்ளை ஒரு கவிஞர். கலைஞர்,அவருடைய இரு சகோதரர்கள் சமூக விடுதலை இயக்கத்தில் பங்குபற்றியவர்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபையில் அவர் அங்கத்தவராக இருந்தவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் பிரச்சார பணிகளில் முக்கிய பங்காற்றியவர். இடர்மிகுந்த காலங்களில் எல்லாம் அவர் எம்மோடு நின்றிருந்தார். கட்சியின் திசைவழி அன்றாட அரசியல் நிகழ்வுகள் நீண்டகால இலக்குகள் தொடர்பான கூர்மையான அவதானமும் கரிசனையும் அவருக்கிருந்தது. உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் வாழும் தோழர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். தோழமைக்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்.

51 வயது என்பது ஒரு குறுகியகால பகுதியே. அடிக்கடி நோய்வாய்படுதல், பல்வேறு உடல் அசௌகரியங்களுக்கு மத்தியில் வன்னி முகாம்களில் வாழ்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படும் இடங்களுக்கு சக தோழர்களுடன் சென்று அவர்களை பார்வையிட்டவர். தோழர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றினார். கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கூட தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எப்போதும் அவர் சோர்வடைந்ததில்லை. யாழ், மட்டுநகர், வன்னி, திருமலை தமிழகம் என பல இடங்களிலும் மனிதர்களுடன் உறவாடிய அனுபவம் அவருக்கு இருந்தது. எப்போதும் தனக்கென பாதுகாப்பான வாழ்க்கையொன்றை தேடிக்கொண்டவரல்ல அவர். நெருக்கடிகள் மத்தியில் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் அவர் பெரும்பாலான காலம் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாழும் போது எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். எமது சமூகத்தில் நிலவிய அராஜகம் அவரை பெரும் கொந்தளிப்பும் புயலுமாக இருந்த சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்தித்தது. அவர் மெலிதானதும், மனிதாபிமான ஈரமும் ஜனநாயக உணர்வும் கொண்ட மனிதராகத்தான் வாழ்ந்தார். பெப்ரவரி 06ம் திகதி அதிகாலை பொழுதில் அவர் நிரந்தரமாக உறங்கிவிட்ட செய்தி எம்மை வந்தடைந்தது. தோழர் இளங்கோ அவர்களுக்கு எம் இதய அஞ்சலிகள்..!!!
-பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
Ler Mais

லண்டனில் இலங்கையின் தேசியக்கொடியை எரிக்க முயன்றவர் கைது


கடந்த 4 ஆம் திகதியன்று, லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகத்தில் பிரவேசித்து இலங்கையின் தேசியக் கொடியை எரியூட்ட முயன்றமை தொடர்பில் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்திருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த 4 ஆம் திகதி, இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குழு ஒன்று, இலங்கையின் தேசியக் கொடியை எரியூட்ட முயற்சித்துள்ளது. எனினும் அதனை லண்டன் பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே வி பி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என ரோஹித்த போகல்லாகம குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இனியபாரதி சிறுவர்களை படைகளில் இணைப்பதாக வெளியான குற்றச்சாட்டை கருணா மறுத்துள்ளார்


தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார்.
தம்மை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மேட் அவர்களைச் சந்தித்த போது, இனியபாரதி அவ்வாறான சிறுவர்களை படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை அவருக்கு தெரிவித்ததாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள கருணா, சிறுவர்களை தமக்கு படைகளில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் இனியபாரதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் அம்பாறையில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010