ஒரு லட்சம் தொழிலாளரின் தொழிலை பாதுகாக்க அரசின் மாற்றுத் திட்டம் என்ன?
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிகின்றது. அவ்வாறெனின் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்களின் தொழில்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத்திட்டம் என்னவென்று கேட்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரவி கருணாநாயக்க எம்.பி. இது தொடர்பில் தொடர்ந்து கூறியதாவது
"ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை நிறுத்துவதற்கு ஒன்றியம் தீர்மõனித்துள்ளதாக தெரியவருகின்றது.
இது மிகவும் அவதானமான நிலைமை என்பதனை குறிப்பிடுகின்றோம். இதன் மூலம் எமது நாட்டின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டு சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்.
இவற்றையெல்லாம் விட முக்கிய விடயமாக சுமார் ஒரு இலட்சம் பேர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலைமை காணப்படுகின்றது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நாங்கள் இலகுவில் கருதிவிட முடியாது.
அந்தவகையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைத்திட்டத்தை எமது நாடு இழக்கும் பட்சத்தில் குறித்த ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்புக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திடம் மாற்றுத்திட்டம் ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அதனடிப்படையில் அரசாங்கத்திடம் காணப்படுகின்ற மாற்றுத்திட்டம் என்னவென்று பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் வினவுகின்றோம். ஒரு இலட்சம் பேரின் தொழில்வாய்ப்பை பாதுகாப்பதற்கான அரசின் திட்டம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக