தீர்க்கமான போட்டியில் நியூஸிலாந்து இந்தியாவுடன் இன்று பலப்பரீட்சை

கொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியநியூஸிலாந்து அணிகள் இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பு தக்கவைத்துக்கொள்ள இன்றைய தினம் கட்டாயம் வெற்றிபெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூஸிலாந்து இன்றைய தினம் தோல்வி அடைந்தால் இலங்கைஇந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் இந்திய அணி தனது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல் இன்று களமிறங்குகிறது. இதனால் நியூஸிலாந்துடனான போட்டியில் சச்சின் டென்டுல்கர் மற்றும் டினேஷ் கார்த்திக் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. அத்துடன் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாட இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. ,

0 கருத்துகள்:
கருத்துரையிடுக