JKR. Blogger இயக்குவது.

திங்கள், 28 செப்டம்பர், 2009

கைத்துப்பாக்கி விற்பனை செய்தவர் கைது

ஆயுத விற்பனை நடைபெறுவதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். மொடல 85 ஒடோநெல் ரகத்தைச் சேர்ந்த இத்தாலி நாட்டு தயாரிப் பான 8 மி.மீ. பிஸ்டல் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுகஸ்தோட்டை, மடவல சாலையில் வைத்து சந்தேக நபர் ஒருவரை குருதுவத்தை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் திருடப்பட்ட பெருந்தொகையான பொருட்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுள் 59-0188 இலக்கமுடைய டொயாட்டோ வான் ஒன்று, 5 லப்டொப்புகள், 13 கையடக்க தொலைபேசிகள் என்பனவும் அடங்குகிறது,

கொழும்பு தரிப்பிடத்தைல் நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்தே இந்த பொருட்கள் களவாடப்பட்டதாக போலீஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010