
ஆஸ்திரேலியாவில் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மணல் புயல் வீசி வருகிறது. இதனால், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால், திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல நகரங்கள் மணல் புயலால் சூழப்பட்டுள்ளன. இதனால், சிட்னி நகர விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. குழந்தைகள், பெரியவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் இந்த மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். “மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்’ என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.நேற்று முன்தினம் துவங்கிய மணல் புயல் இன்று வரை நீடிக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. விளைநிலங்களில் டன் கணக்கில் மணல் படிந்துள்ளதால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோதுமை விளைச்சல் இதனால் பாதிக்கப்படுமா என்பது பற்றி இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் தெரியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக