விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன - போலீஸ்

செட்டிகுளம் பகுதியிலுள்ள ஸ்கந்தபுரத்திலுள்ள அணை ஒன்றுக்கு அருகாக ஒரு தற்கொலைதாரி அங்கி, மூன்று கிளைமோர்கள் மற்றும் மூன்று கைக்குண்டுகளை கண்டெடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது. வவுனியா போலீசுக்குக் கிடைத்த தகவலை அடுத்து சிறப்பு குழுவினர் இவற்றைக் கண்டு பிடித்தனர் என வழமையாக கூறும் கூற்றையே போலீஸ் இப்போதும் கூறியுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு வாகரை வித்தியாலயத்தின் மைதானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருந்தமையைத் தாம் கண்டுபிடித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக