மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல்
.jpg)
இச்சங்கங்கள் சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் தேசிய அபிவிருத்தியை மேலும் வளம் பெறச்செய்யும் நோக்கில் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
மன்னார் நகரில் தம்மால் தற்காலிகமாக பாவனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நான்கு முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை நிரந்தர தரிப்பிடங்களாகப் பாவிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு முச்சக்கரவண்டிச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
புதிய முதலீடுகளை மேற்கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் தமது சங்கத்திற்கென எரிபொருள் நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இனம்கண்டு ஏனைய பொருட்களை இம்மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் தடைகளை நீக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டுமென வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் தமது விளையாட்டுத் துறையை மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பதற்குத் தேவையான உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த நிதியாண்டின் போது முன்னுரிமை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இதேவேளை அன்றைய தினம் வருகை தந்திருந்த மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்த அவர்களுக்கான ஊதியம் தொடர்பான கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு வேதனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அடுத்து வரும் தேர்தல் ஆண்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்திற்கொண்டு சாத்தியமான உதவிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக