JKR. Blogger இயக்குவது.

சனி, 12 டிசம்பர், 2009

வான்படைப் போராளிகளாக இருந்த விடுதலைப்புலிகள் இருவரை டிசம்பர் மாதம் 16ம்திகதிவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு!


விடுதலைப்புலிகளின் வான்படைப் போராளிகளாக இருந்ததாக ஒப்புக் கொண்டுள்ள இருவர் குறித்து நேற்று வழக்கு விசாரணை நடந்துள்ளது. கொழும்பு குற்றவியல் நீதிமன்றில் நடந்த விசாரணையின் போது இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்படி இருவர் குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவரையும் டிசம்பர் மாதம் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஆயிஷா ஆப்தீன் பணித்துள்ளார். பத்மநாதன் சுரேஷ், கந்தசாமி சதீஷ் ஆகிய இருவருமே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டவர்கள் என்றும் அவர்கள் இருவரும் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கிறது. வான்படையில் இருந்த இருவரும் புலிகளின் விஷ்வமடு வான்தளத்தில் கடமையில் ஈடுபட்டவர்களாம் அத்தோடு கடைசியாக இடம்பெற்ற யுத்தத்தின் போது இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளனராம் இதில் சதீஷ் என்பவர் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாகவும் அதேவேளை மந்துவில் பகுதியில் சண்டையில் ஈடுபட்டவர் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த இருவர் குறித்தும் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பொலிஸார் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010