2 வருடத்துக்குப் பின் தான் நடிப்பேன்-கோபிகா
.jpg)
நான் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறேன்.. இனி 2 ஆண்டுக்கு ஒருமுறைதான் படம் நடிப்பேன், என்று தெரிவித்துள்ளார் நடிகை கோபிகா. ஆட்டோகிராமப் மூலம் அறிமுகமான கோபிகா, தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். நல்ல மார்க்கெட் இருந்தபோதே, கடந்த வருடம் (2008) ஜுலை 27ம் தேதி அகிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அயர்லாந்தில் டாக்டராக இருக்கிறார் அகிலேஷ். மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார் கோபிகா. திருமணத்துக்குப்பின் கணவருடன் அயர்லாந்தில் குடியேறிய கோபிகா, அதே வேகத்தில் மீண்டும் கேரளாவுக்கு வந்துவிட்டார். வந்த கையோடு தனது திருமண சபதத்தை தூக்கிப் போட்டுவிட்டு, 2 மலையாளப் படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் அயர்லாந்து சென்றார். இப்போது ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக கோபிகா சென்னை வந்தார். இரண்டு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து, விளம்பர படத்தில் நடித்து முடித்தார். கேரளாவில் இருந்து அவருடைய பெற்றோரும் வந்திருந்தனர். படப்பிடிப்பு முடந்ததும் இந்த முறை கேரளா செல்லவில்லை அவர். அயர்லாந்துக்கு புறப்பட்டார், சென்னையிலிருந்தே. புறப்படும் முன் அவர் அளித்த பேட்டியில், “திருமணத்துக்குப்பின், நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் இருந்தேன். என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால், 2 மலையாள படங்களில் மட்டும் நடித்தேன். இந்த விளம்பரப் படம் முன்பே நான் ஒப்புக் கொண்டது. அதனால்தான் வந்து நடித்துக் கொடுத்தேன். அதற்காகத்தான் நான் சென்னை வந்தேன். அயர்லாந்தில், நான் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன். என் கணவர் என்னிடம் மிகுந்த பிரியத்துடன் நடந்து கொள்கிறார். இப்போது நான், 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். குழந்தையின் நலன் கருதி, இனிமேல் 2 வருடங்களுக்கு பிறகுதான் நடிப்பேன்” என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக