வவுனியாவில் 39சிலைகள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு

வவுனியா புளியங்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த விலைமதிக்க முடியாத 39 ஆலயசிலைகள் புளியங்குளம் பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் ஆலயப் பகுதியில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இச்சிலைகள் இந்திய சிற்பிகளால் செதுக்கப்பட்டதாக பொலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. யுத்தம் காரணமாக சிலைகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாங்குளம் காவல்துறை அத்தியட்சகர் ரத்மால்கொடிதுவக்கு இச்சிலைகள் தொடர்பாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதுடன் அவை குறித்து தீர்மானிப்பதற்காக அநுரதாபுரத்திலுள்ள தொல்பொருள் நிபுணர்களை புளியங்குளத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக