அடையாள அட்டை இல்லாதோருக்கு தேர்தலில் வாக்களிக்க விசேட ஏற்பாடு : யாழ்.அரச அதிபர்

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக தே.அ.அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரச அதிபர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு, 2010 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தற்காலிக அடையாள அட்டை விண்ணப்பப் படிவங்கள் சகல பிரதேச செயலர்களிடமும் தற்போது கையளிக்கப்பட்டுள்ளன.
விசேட அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் உடனடியாகத் தங்கள் பிரிவு கிராம சேவையாளரிடம் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அனுமதித்த ஆவணங்கள்:
ஆட்பதிவு திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை
செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
அரசசேவை ஓய்வூதிய அடையாள அட்டை
முதியோர் அடையாள அட்டை
ஆட் பதிவுத் திணைக்களத்தின் வணக்கத்துக்குரியவர்களுக்கான அடையாள அட்டை
2010 ஆம் ஆண்டில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களின் போது வழங்கப்படும் விசேட அடையாள அட்டை
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக