ஜனாதிபதி தரும் விருந்தில் மது பாவனை தவறில்லை : ஜா.ஹெ.உ. தலைவர்

ஜனாதிபதி நடத்தும் விருந்துபசாரங்களில் மதுபானம் பயன்படுத்துவதில் தவறில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார ஊடகவியலளார் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
'போதைக்கு முற்றுப் புள்ளி' என்ற ஜாதிக ஹெல உறுமயவின் முக்கிய கொள்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது, எல்லாவல மேதானந்த தேரர் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்.
நாட்டின் சிரேஷ்ட பௌத்த பிக்கு ஒருவர் ஆளும் கட்சியைக் காப்பாற்றும் நோக்கில் மதுபான பாவனைக்கு ஆதரவான கருத்துவெளியிட்டமை ஊடகவியலாளர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக