JKR. Blogger இயக்குவது.

திங்கள், 7 டிசம்பர், 2009

வவுனியா கெப்பித்திக்கொல்லாவ வீதி திறக்கப்பட்டது

வவுனியா - கெப்பித்திக்கொல்லாவ வீதி இன்று முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுகின்றது.

இதற்கமைய அனைத்து வாகனங்களும் இவ்வீதியூடாகப் போக்குவரத்தில் ஈடுபடலாமென இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

2007ம் ஆண்டில் கெப்பித்திக்கொல்லாவையில் பஸ் வண்டியொன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இவ்வீதியினூடான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்புத் தரப்பினரின் வாகனங்கள் மட்டுமே இவ்வீதியைப் பாவித்து போக்குவரத்தில் ஈடுபட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010