
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் மரணமடைந்து விட்டதாக இலங்கைஅரசு இந்தியாவிடம் உறுதிப்படுத்தியுள்ளது இந்த உறுதிப்படுத்தல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று திரும்பிய ஜனாதிபதியின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு முடிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிரபாகரனினதும் பொட்டுஅம்மானினதும் மரணங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை இலங்கையிடம் இந்தியா கோரியிருந்தது இந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கடந்த மேமாதத்தில் இலங்கை வந்திருந்த போது கோரியிருந்தனர் இதேவேளை குறித்த இருவரினதும் மரணங்கள் உறுதிப்படுத்திய சான்றிதழ்கள் தமிழக பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கு விசாரணையை முடிவுறுத்த முடியும் என இந்திய தரப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொட்டுஅம்மான் உட்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும் 26 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதில் நளினி முருகன் சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக