பலாலி வீதியில் இராணுவ சீருடையில் சடலம் மீட்பு

இன்று அதிகாலையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்டதாகவும் இதனைத் தொடர்ந்து காலையில் வீதியில் சென்றவர்கள் சடலத்தைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பொறுப்பெடுத்தனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதிலும், குறிப்பிட்ட இடத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தமையால் உடனடியாக எவரும் செல்லிவில்லை எனவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், பலாலி வீதியில் தபால் கட்டைச்சந்திக்கு அருகில் மேற்படிச் சடலம் சீருடையுடன் காணப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு அதிகாலையில் ஏராளமான பொலிசார் இராணுவப் பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பதட்டமான நிலைமை காணப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக