இடம்பெயர் மக்களின் சுதந்திர நடமாட்டம் : பிரிட்டன் பாராட்டு

இடம்பெயர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்கு பிரிட்டன் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
வட பகுதியில் உள்ள, இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டதைப் பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் மைக் பொஸ்டர் வரவேற்றுள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்குத் திரும்புவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் தொடர்ந்து கூறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர் முகாம்களுக்கான போக்குவரத்து, மற்றும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது வீடுகளுக்குத் திரும்பும் வகையில் அவர்களது வாழ்கையை மீளமைத்துக் கொள்ளவும் பிரிட்டன் தொடர்ந்து உதவும் என்றும் பிரிட்டிஷ் அமைச்சர் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக