JKR. Blogger இயக்குவது.

புதன், 23 டிசம்பர், 2009

புளொட் அமைப்பும் வவுனியா நகரசபையும் இணைந்து வவுனியா கோவில்குளத்தில் பாரிய சிரமதானம்.. (புகைப்படங்கள் இணைப்பு)

வவுனியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வவுனியா கோவில்குளத்தில் இன்று பாரிய சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. புளொட் அமைப்பினரும் வவுனியா நகரசபையினரும் இணைந்தே பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன் ஆரம்ப நிகழ்வு கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த நூலகத்தில், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமாகிய ஜி.ரீ.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபையின் உபதலைவர் என்.எம்.ரதன், எஸ்.சுரேந்திரன். இ.சிவக்குமார், கே.பார்த்திபன், எஸ்குமாரசாமி மற்றும் புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வை.பாலச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இதுவரையில் 18பேர் டெங்கு நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும், 700ற்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் வேகமாக ஆட்களைப் பலிகொண்டு வரும் இந்த ஆட்கொல்லி நோயைக் கட்டுப்படுத்தி உயிரிழப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இங்கு உரையாற்றிய அனைவரும் ஒருமுகமாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010