JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 1 டிசம்பர், 2009

வடக்கில் நீதி நிர்வாக சீரமைப்புக்குழு


வட மாகாணத்தின் நீதி நிர்வாகத்தைச் சீர் செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் உயர் மட்டக் குழுவொன்றை நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட நியமித்துள்ளார்.

இதன் உறுப்பினர்களாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பின் செயலாளர் சுகத் கம்லத் அரசமைப்பு விவகார அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்கிரமசிங்க நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர்களாக கமலினி டி.சில்வா எஸ்.ரஹாவட்ட யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் நீதிச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் எம்.பி.டி சில்வா பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஏ.ஞானதாசன் நீதி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் டபிள்யூ.ஏ செனவிரட்ன சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வி.ஆர்.டி சில்வா யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் சமுதாய சீர்திருத்த ஆணையாளர் நாயகம் லலித் அன்றா ஹனடி நீதி அமைச்சின் பிரதம கணக்காளர் திலந்தி பெர்ணாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010