யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் - த.தே.கூ

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய அசையும் அசையா சொத்துக்களுக்களின் பெறுமதியினை அரசாங்கம் அவர்களுக்கு மீள் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது உடைமைகள்,கால்நடைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்தும்போது சாதாரண வாழ்க்கை நடைமுறையை பின்பற்றக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இந்தப் பொறுப்பினை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக