தேர்தல் பிரசாரத்தில் அமளி - சல்மான் ரசிகர்கள் மீது தடியடி
.jpg)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் சல்மான் கான் ரசிகர்கள் அலை மோதியதால் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இந்தூர் மாநகராட்சி மேயர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சல்மான்கான் பிரசாரம் செய்தார். இதற்காக திறந்த வேனில் பிரசாரத்துக்கு செல்ல வெளியே வந்தார்.
அப்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் சல்மான்கானை முற்றுகையிட்டு நெருங்க முயன்றனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சல்மான்கான் வேனுக்கு செல்ல முடியாத நிலை உருவானது.
எனவே போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் ரசிகர்கள் கலைந்து சிதறி ஓடினர். இதையடுத்து சல்மான் வேனில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக