ஜெனரல் சரத்தின் இல்லம் இராணுவப் பொலிஸாரால் நேற்று சுற்றி வளைப்பு

கொழும்பு புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ இல்லத்தை இராணுவப் பொலிஸார் நேற்று மாலை சுற்றி வளைத்துள்ளனர்.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் இல்லத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மேலதிக படைவீரர்களைக் கைது செய்யும் நோக்கில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சுற்றி வளைப்பு நடவடிக்கை தொடர்பில் கேள்வியுற்ற ஊடகவியலாளர்கள் குறித்த பிரதேசத்திற்கு விரையும் முன்னர் இராணுவ பொலிஸார் அவ்விடத்தைவிட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத்தில் இருந்த மேலதிக வாகனங்களை எடுத்துச் செல்வதற்காக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக