JKR. Blogger இயக்குவது.

திங்கள், 7 டிசம்பர், 2009

எஸ்.பி.யுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சு


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்கவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஹங்குராங்கெத்தையிலுள்ள எஸ்.பி. திஸாநாயக்வின் வீட்டிற்கு நேற்று திடீரென ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடன் ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தையையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரிப்பதற்கான முடிவினை எஸ்.பி. திஸாநாயக்க எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த முடிவு குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தி எஸ்.பி. திஸாநாயக்க அறிவிப்பாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரை வைபவமொன்றில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார். இதன்போது எஸ்.பி. திஸநாயக்கவின் ஹங்குராங்கெத்திதையிலுள்ள வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையில் விரிவான பேச்சுவார்த்øத் இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில கோரிக்கைகளை எஸ்.பி. திஸநாயக்க ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவினை எஸ்,பி. திஸாநாயக்க எடுத்ததாக கூறப்படுகின்றது. இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் எஸ்.பி. திஸநாயக்க செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010