JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

நாட்டில் சர்வதேசச் சதி என்கிறார் வெளிவிவகார அமைச்சர்


நாட்டில் சர்வதேசச் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவிக்கிறார்.

கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மறைமுகமாகச் செயற்படும் சக்தி ஒன்றினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இராணுவத்தினருக்குக் கட்டளையிடும் பிரதானியாக ஜனாதிபதியே செயற்படுவதாகவும் அதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டுமெனவும் அவர் கூறினார்.

இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட ஒருவர் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதற்கும் அதன் கௌரவத்தை ஜனாதிபதிக்கு வழங்காது பறித்துக் கொள்வதற்கும் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலையில் அவர் இருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை இரண்டாகப் பிரித்து அதற்குத் தலைமையேற்ற ஜனாதிபதியையும் அதன் நடவடிக்கையுடன் தொடர்புடைய இராணுவத் தளபதியையும் பகைவர்களாக்கும் சர்வதேசச் சதித்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010