JKR. Blogger இயக்குவது.

சனி, 12 டிசம்பர், 2009

பிறந்தநாள் பரிசை இந்தியாவுக்கு கொடுத்தார் யுவராஜ்


டெஸ்ட் தொடரின் படுதோல்வியின் பின்னர் முதலாவது T /20 போட்டியில் இந்தியாவை பழிதீர்த்த இலங்கை அணியை இந்தியா இரண்டாம் போட்டியில் மீண்டும் பழிதீர்த்துள்ளது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய சங்ககாரவே இரண்டாம் போட்டியிலும் இலங்கை சார்பாக சிறப்பாக ஆடினார் இவர் 31 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.207 ஓட்டங்கள் என்பது இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதாரண இலக்கல்ல.எங்கே இலங்கை டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடியாக T/20 தொடரை கைப்பற்றப் போகிறதோ என்று நினைத்திருக்கையில் ஷேவாக் (64 * 36), தோனி (46 * 28), யுவராஜ்(60 * 25) அதிரடியால் ஐந்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா ஆறு விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. ஆட்டனாயகனான யுவராஜ் சிங் தனது 28 ஆவது பிறந்தாநாளிலே ரசிகர்களுக்கு கொடுத்த விருந்தாக அவரது அதிரடி ஆட்டம் அமைந்தது. ஐந்து சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் தன்னை மீண்டுமொருதடவை T/20 சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.(சூப்பர் ஸ்டார் பிறந்ததினத்தில் பிறந்ததால்தான் இந்த சூப்பர்பவரோ?) முதலாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் 15 ஆம் திகதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான முன்னோட்டத்தை விரைவில் எதிர்பாருங்கள்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010