எயிட்ஸ் நோயாளர்கள் அரச செலவில் பராமரிப்பு : தென்னாபிரிக்க ஜனாதிபதி
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்மார்களையும் அரச செலவில் பராமரிப்பதற்கு தென்னாபிரிக்கா தீர்மானித்துள்ளது.அந்நாட்டின் ஜனாதிபதி ஜெக்கப் சூமா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எயிட்ஸ் நோய் தென்னாபிரிக்காவில் பாரியதொரு மனித அழிவை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் இந்நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு அனைவரும் தாயாராக வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் 50 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் 5.7 மில்லியன் பேர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குமான பராமரிப்புச் செலவுக்கென ஆண்டொன்றுக்கு 120 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டுவரை எச்ஐவி தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவுக்கு 560 மில்லியன் டொலர் பண உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக