இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தைத் தொடர்ந்து, இந்திய அணியின் மேலாளருக்கும் பன்றிக் காய்ச்சல்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தைத் தொடர்ந்து, இந்திய அணியின் மேலாளருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தொற்றியுள்ளது. இதனால் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மாலை மொகாலியில் நடக்கிறது. இதற்காக அனைத்து வீரர்களும் நேற்றே மொகாலி சென்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில், வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. அவரது உடலை பரிசோதித்ததில் அவரை பன்றி காய்ச்சல் தாக்கி இருந்தது தெரிந்தது. இதனால் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி மானேஜர் மபியங் சேகருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கும் பன்றிக் காய்ச்சல் தாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மற்ற வீரர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளனர். யாருக்காவது சிறிது அறிகுறி இருந்தாலும் உடனே டாக்டருக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக