பா.நடேசன் கொல்லப்பட்டபோது எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை: ஐ.நா ஒப்புதல்!

விடுதலைப் புலிகள் சரணடைந்தபோது எங்களைத் தொடர்புகொண்டனர். அவர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்படிக் கேட்டனர். ஆனால், எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அப்போது கால அவகாசம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஐ.நாவால் தலையிட முடியாமல் போய்விட்டது’ என்று ஐ.நா மனிதநேயப் இரிவுச் செயலர் ஜான் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு ஒப்புகொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகச் செயலர் புலித்தேவன் உள்ளிட்ட பலர் மே மாதம் 16 ஆம் நாள் சரணைடயச் சென்றபோது, சிங்கள இராணுவ வெறியர்கள் அவர்கள் அனைவரையும் கொலைசெய்தனர்.
இந்தச் சரணடைவுக்கு முன், விடுதலைப் புலிகள் இந்தியா, ஐ.நா உள்ளிட்ட பல அதிகார மையங்களிடம் பேசி ஒப்புதலும் உத்தரவாதமும் பெற்றார்கள்.
சரணடைந்த பிறகு, பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும், படுகொலைகளை நிறுத்த வேண்டும், சரணடைந்த அனைவரையும் அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை, மேற்கண்ட அதிகார மையங்கள் வழங்கியிருந்தன.
ஆனால், நடேசன உள்ளிட்ட தளபதிகள் சரணடயச் சென்றபோது, அவர்களை இந்தியா, ஐ,நா உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுமே காட்டிக்கொடுத்தன. சிங்கள வெறியர்களின் அத்துமீறலை அமைதியாக இருந்து ஆதரித்தன.
மேரிகெல்வின் என்ற பத்திரிகையாளர் மட்டுமே, முதல் முதலில் இச் சம்பவத்தின் துரோகப் பின்புலங்களை வெளிச்சமாக்கினார். தமிழகத்தில், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், ’இந்தச் சரணடைவுப் பேச்சுவார்த்தையின் போது, இந்திய அமைச்சர் பா.சிதம்பரம், கனிமொழி கருணாநிதி ஆகியோரும் ஈடுபட்டதாகக்’ கூறிவருகிறார். ஆனால், சரணடைந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு பா.சிதம்பரம், கனிமொழி ஆகியோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறுவதே இல்லை.
இப்போது, ஐ.நாவும் முதல்முறையாக, ‘சரணடையும் முன் புலிகள் எங்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தொடர்புகொண்டார்கள்’ என ஒப்புக்கொண்டுள்ளது.
ஆகக் கூடி, சிங்கள வெறியும் சர்வதேச சதியும் இணைந்து தமிழ்த் தளபதிகளின் உயிர்களைப் பலிகொண்டுள்ளன என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக