உறுகாமம் வெடிப்புச் சம்பவத்தில் இரு மாணவர்கள் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய உறுகாமம் பகுதியில், வெட்டைவெளியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தனர்.
புலிகள் புதைத்து வைத்திருந்த பாரிய குண்டு ஒன்றை எடுத்து இவர்கள் விளையாடிய போதே அக்குண்டு வெடித்ததில் இவர்கள் பாரிய காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டில் கல்வி பயிலும் செல்வராசா சிவசங்கர் (10 வயது) 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் செல்வராசா நிரோசன்(12 வயது) ஆகிய இரு சகோதரர்களே படுகாயம் அடைந்தவர்களாவர்.
கூலித் தொழில் புரியும் 42 வயதுடைய நாகலிங்கம் செல்வராசாவின் புதல்வர்களான இருவரும் விளையாடிக்கொண்டிருந்த போது பாரிய சத்தத்துடன குண்டு வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக