கந்தபொல இலங்கை வங்கிக் கிளையில் கொள்ளையிட முயன்ற ஐவர் பொலிஸாரால் கைது

நுவரெலியா, கந்தப்பொல இலங்கை வங்கிக் கிளையில் கொள்ளையிடச் சென்ற ஐவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரும் வங்கிக் கிளையை உடைத்து உள்நுழைந்ததாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளையிடத் திட்டமிடப்பட்டிருப்பது குறித்து அரச புலனாய்வு சேவைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்தே பொலிஸார் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று கொள்ளையைத் தடுத்து நிறுத்தி மேற்படி நபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும் இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக