JKR. Blogger இயக்குவது.

வியாழன், 12 நவம்பர், 2009

கல்முனையில் ரூ. 44 லட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுக்கள் பறிமுதல்

கொழும்பிலிருந்து சட்டவிரோதமாக கல்முனைப் பிரதேசத்திற்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 44 லட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களைப் பொலிஸார் இன்று காலை 9.00 மணியளவில் கைப்பற்றியுள்ளனர். மினுவாங்கொடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லொறி ஒன்றில் கோழித்தீன் ஏற்றிவந்த சாக்குகளுக்கு இடையில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, கல்முனை தரவைக் கோயில் சந்தியில் வைத்து லொறியைத் தாம் இடைமறித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பரிசோதகர் பி.ஏ.எஸ். சிரான் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். லொறி சாரதியும் உதவிக்கு வந்த நபர் ஒருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சிரான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010