JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 1 நவம்பர், 2009

இடைத்தங்கல் முகாம்களைச் சேர்ந்த 507 மாணவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி


வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா முகாம்களைச் சேர்ந்த 5413 மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள். இந்தப் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த மாதம் 2 ஆம் திகதி வெளியாகிய போதிலும், முகாம்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பரீட்சை முடிவுகளை சீராக்குவதில் ஏற்பட்ட கால தாமதமே இதற்குக் காரணம் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

தற்போது வெளியாகியுள்ள இந்த முடிவுகளின்படி, கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த 267 மாணவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும், மன்னாரைச் சேர்ந்த 27 மாணவர்களும், வவுனியாவைச் சேர்ந்த 10 மாணவர்களும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களுமாக மொத்தம் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010