ராஜ் குந்த்ராவை மணந்தார் ஷில்பா!
பிரபல பாலிவுட்மும்பையில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் இந்தத் திருமணம் நடந்தது.
சாதாராண மாடலாக மும்பைக்கு வந்த பெங்களூர்
இந்த வெற்றிக்கு பின்னர் தான் 34 வயதான ஷில்பா ஷெட்டி, 29 வயதான லண்டன் வாழ் இந்திய தொழில் அதிபரான ராஜ் குந்த்ராவை சந்திக்க நேரிட்டது. பார்த்ததும் இருவருக்கும் பற்றிக் கொண்டது காதல்.
ராஜ் குந்த்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை
எனவே ஷில்பா ஷெட்டி-ராஜ்குந்த்ராவுக்கு திருமணம் முடித்து வைக்க இரு தரப்பு பெற்றோரும் சம்மதித்தனர். கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நேற்று ஞாயிற்றுக் கிழமை மும்பை கண்ட்லாவில் அமைந்துள்ள ஷில்பா ஷெட்டியின் தோழி கிரண் பாவாவின் பங்களாவான 'பாவா வில்லா'வில் நேற்று மாலை ஆடம்பரமாக நடந்தது திருமணம்.
குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் மணமகன் ராஜ் குந்த்ரா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருடன் குடும்பத்தினரும், நண்பர்களும், நடிகர் ஜாக்கி பக்னானியும் வந்தனர்.
பாவா வில்லாவில் மாப்பிள்ளையை ஷில்பா ஷெட்டியின் பெற்றோரும், தங்கை ஷமீதா ரெட்டியும் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் திருமணச் சடங்குகள் நடந்தன.
இந்தத் திருமணத்துக்கு ஷில்பா ஷெட்டி அணிந்திருந்த உடையை பிரபல ஆடை வடிவமைப்பு கலைஞர் தருல் தஹிலியானி டிசைன் செய்திருந்தார்.
மாப்பிள்ளை பஞ்சாபி என்பதால் முதலில் பஞ்சாபி முறைப்படி சடங்கு நடந்தது. அதைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டி மங்களூரை சேர்ந்தவர் என்பதால் அங்கு பின்பற்றப்படும் கலாசாரப்படியும் திருமணம் நடந்தது.
மணவிழாவில் ஷில்பா மற்றும் ராஜ் குந்த்ரா என இரு தரப்பு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் சன்னி தியோல், சுனில் ஷெட்டி, ஜாக்கி பக்னானி, வாசு பக்னானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளை வரவேற்பு!
நாளை செவ்வாய்க்கிழமை ஷில்பா- ராஜ் குந்த்ரா திருமண வரவேற்பு மும்பையில் நடக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துகின்றனர்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக