தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம வெலிக்கடைச் சிறைக்கு மாற்றம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் காலி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். தென் மாகாணத்தின் அரசாங்க முகவர் மற்றும் மாகாணசபையின் ஆளும் கட்சி வேட்பாளரான நடிகை அனார்கலி ஆகர்ஷா ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திற்காக பொலீசாரினால் இவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் காலி பொலீசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக