JKR. Blogger இயக்குவது.

திங்கள், 23 நவம்பர், 2009

மும்பை தொழிலதிபருடன் நந்திதாதாஸ் ரகசிய திருமணம்!


இந்தியில் 1996ல் ஃபயர் என்ற படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் தமிழில் அழகி போன்ற மென்மையான படங்களில் தோன்றிய நந்திதா தாஸ் மும்பை தொழிலதிபர் சுபோத் மஸ்காரா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கெனவே தனது நெருங்கிய நண்பராக இருந்த சல்மயா சென் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் மும்பை தொழில் அதிபர் சுபோத் மஸ்காரா என்பவருடன் நந்திதாவுக்கு காதல் மலர்ந்தது. தொழில் அதிபரும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளனராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010