புலிகளின் சொத்துக்களை பகிர்வதில் இரு குழுக்களுக்கு இடையில் முறுகல்

புலிகள் அமைப்பிற்கு சொந்தமான சர்வதேச சொத்துக்களை பகிர்ந்து கொள்வதில் இரண்டு குழுக்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் புலிகளுக்குச் சொந்தமான சுப்பர் மார்க்கட்டுக்கள் வீடியோ கடைகள் வர்த்தகக் கட்டடங்கள் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சொத்துக்களை பகிர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நோர்வே நெடியவன் குழுவினருக்கும் அமெரிக்க ருத்ரகுமாரன் குழுவினருக்கும் இடையில் சொத்துக்களை பகிர்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை புலிகள் அமைப்பு வௌ;வேறு பெயர்களில் சுமார் 400 நிறுவனங்களை நடாத்தி வந்ததாக கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் விசாரணைகளின்போது தகவல் வெளியிட்டுள்ளார். புலிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக