மாந்தை மேற்கில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவர் காயம்

மன்னார் மாந்தை மேற்கு பகுதியில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எப்.எஸ்.டி எனப்படும் கண்ணி வெடி அகற்றும் குழுவினர் இன்று பிற்பகல் 2.15 மணியவில் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் தவறுதலாக கன்ணிவெடி ஒன்று வெடித்ததில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. காயமடைந்த இருவரும் மன்னார் வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஏ.சுதாகர் (வயது 21) மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஜீவா (வயது 30) ஆகியோரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக