JKR. Blogger இயக்குவது.

புதன், 4 நவம்பர், 2009

ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையுமா?:நாளை முடிவு


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி அணி திரண்டுள்ளது. இதில் ததேகூ இணைவது குறித்த முடிவு நாளை தெரியவரும் என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்தப் புதிய கூட்டு முன்னணியில் இணைவது என தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் கொள்கையளவில் முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் கூடி, இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த முக்கியஸ்தர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் எந்த வகையில், என்ன வகையான முடிவோடு இணைந்து செயற்படுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010