JKR. Blogger இயக்குவது.

புதன், 11 நவம்பர், 2009

மக்களுக்கு அத்தியாவசிய சேவையாற்ற நாம் எப்போதும் தயார் : இராணுவப் பேச்சாளர்


இராணுவத்தினரின் கடமை யுத்தம் செய்வது மட்டுமல்ல என்றும் பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு இராணுவத்தினர் எப்போதும் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"நாட்டில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டங்களின் போதல்லாமல் எந்த வேளையிலும் அதற்கான சவாலை ஏற்றுக் கொண்டு எந்தத் துறையிலும் கடமையாற்றுவதற்கு எமது இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாம் பொதுமக்களின் நன்மைக்காகவே கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம். மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே எமது சேவைகளும் அமைகின்றன. அதற்கான தேவை ஏற்படும் வேளையில் அதனை எமது படையினர் சரிவர செய்வர்" என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010