கருத்துக் கணிப்புக்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அதிக ஆதரவு

கருத்துக் கணிப்புக்களில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அதிக ஆதரவு காணப்படுவதாக இருதின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி ஆங்கில இணையப் பத்திரிகைகளில் நடத்தப்பட்டு வரும் கருத்துக் கணிப்புக்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தகுதியுள்ளதா மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஊழல் மோசடிகளை ஒழிக்க முடியுமா என்ற ரீதியிலும் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த இரண்டு கருத்துக் கணிப்பக்களிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகவே மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக