பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
விசா வழங்கும் செயன்முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளமையால் புதிய விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 18 ஆம் புதன்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அதன் பின்னர் விசா விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே ஆரம்பமாகும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக