JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் விரைவில்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி


ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை அதிகாலை வெளியாகும் என மத்திய அமைச்சர்களான மைத்திரிபால ஸ்ரீ சேன ,ஜோன் செனவிரத்ன மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆராயும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதன் ஆதரவு கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் (ஸ்ரீ.ல.சு.க) ,மாகாண சபை உறுப்பினர் எம்.சுபைர் (அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்) மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வெள்ளைத்தம்பி அமிருதீன் (தேசிய காங்கிரஸ்) உட்பட அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக இங்கு உரையாற்றி யஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால ஸ்ரீ சேன,"அரசியல் வேறு ,அபிவிருத்தி வேறு அல்ல.இரண்டும் இணைந்த செயல்பாட்டினால் தான் அபிவிருத்தியை அடைய முடியும் .எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை வெளியாகும்.

எதிர்க்கட்சிக் கூட்டமைப்பில் எத்தனை கட்சிகள் அங்கம் வகித்தாலும் இதுவரை வேட்பாளர் யார் என்று தீர்மானிக்க முடியாத நிலையே அங்கு காணப்படுகின்றது.முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் .அதன் பின்னர் எப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும்." என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010