பிரபுதேவா - நயன் 'தேனிலவு'!

நயன்தாராவுடனான காதலில் இனி மறைக்க ஒன்றுமில்லை என்பதால், அவரை பகிரங்கமாகவே அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரபு தேவா.
இருவரும் தாலி கட்டிக்கொள்ளாத கணவன் மனைவி யாக ரகசிய வாழ்க்கை நடத்தி வருவது தெரிந்ததே. இதனை இருவருமே மறுக்கவில்லை.
இதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு காட்டி வந்த பிரபுதேவா மனைவி ரமலத்தும், வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் ஒரே வீட்டில் வசிக்காமல் தனித்தனியாக வசிப்பதாக ஏற்பாடாகியுள்ளதாம். இதற்காக நயன்தாராவுக்கு தனி வீடு பார்த்து வருகிறாராம் பிரபுதேவா.
நயன்தாராவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் அவர் நடித்துச் சம்பாதித்ததே. எனவே மிக பிரமாண்டமான புதிய பங்களாவை அவருக்கு வாங்கித் தரவேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறாராம் பிரபுதேவா.
இந்நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் இப்போது அமெரிக்காவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.
பிரபு தேவா இயக்கும் புதிய படத்துக்கு லொக்கேஷன் பார்க்கத்தான் இந்தப் பயணமாம். காரணம் இதுவாக இருந்தாலும், பெற்றோர், கட்டி
ய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோருக்கும் தனது காதல் விவகாரம் தெரிந்த பிறகு, பிரபு தேவா வெளிப்படையாக சென்றுள்ள வெளிநாட்டுப் பயணம் இது. கிட்டத்தட்ட சீக்ரட் தேனிலவு மாதிரி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக