JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 6 நவம்பர், 2009

கடலைக் கடையா? பாராளுமன்றமா? ஆளுந்தரப்பினர் கேள்வி


அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! இது கடலைக் கடையா? பாராளுமன்றமா? என்று ஆளுந்தரப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கேள்வி எழுப்பினர். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே ஆளுந்தரப்பினர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர். ஆளும் கட்சியின் எம்.பி.யான லலித் திஸாநாயக்க, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவருமே ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி மேற்கண்ட கேள்வியை எழுப்பினர்.

அவசரகாச் சட்டத்தின் மீது ஜே.வி.பி. எம்.பி.யான எஸ். சுபசிங்க உரையாற்றிக்கொண்டிருந்த போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அடிக்கொரு தடவை ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பி இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார். அவருடன் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, ஆளுங்கட்சியின் எம்.பி.யான லலித் திஸாநாயக்க ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

இதனிடையே அவைக்குள் பிரவேசித்த ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர எதிர்க்கட்சி பின்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த கொட்டபொல அமரகீர்த்தி தேரரிடம் கடலை பேக்கை வாங்கி கையில் ஏந்தியவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த லலித் திஸாநாயக்க எம்.பி. ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினரை இது பாராளுமன்றமா? கடலை கடையா? கடலை கொண்டு வந்தவர் நாளை குண்டு கொண்டு வரலாம். இது சிறப்புரிமை பிரச்சினையாகும் என்று சுட்டிக்காட்டினார்,. இதனை அவதானித்த தயாசிறி எம்.பி. சிரித்துக்கொண்டே இவரையா கூறுகின்றீர்கள் என கொட்டபொல அமரகீர்த்தி தேரரை காண்பித்து சைகையில் கேட்டு விட்டு அவையை விட்டு வெளியேறிவிட்டார்.
 
JKRTAMIL | by TNB ©2010