மீள் குடியேறியவர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்

- பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன்
நேர்காணல் - ஜேம்ஸ்
முகாம்களிலிருந்து மீள் குடியேறிய மக்கள் முன்னர் வாழ்ந்த இடம் முற்று முழுதாக அழிந்து போயிருக்கின்ற நிலையில் மற்றைய பகுதிகளில் இயல்பாக வாழ்பவர்களைவிட அவர்களுடைய தேவைகள் பாரியதாகவே இருக்கின்றன.
ஐயாயிரம் ரூபாய் அவர்களுடைய கையில் கொடுத்திருப்பதாகவும் இருபதாயிரம் ரூபாய் வங்கியில் போடப்படும் எனவும் சொல்லப்பட்டிருப்பதோடு ஆறுமாத காலங்களுக்கு நிவாரணம் கொடுப்பதாக சொல்லியிருந்தாலும் அம் மக்களுடைய தேவைகள் இன்னும் அதிகமாகவேதான் இருக்கின்றன. அவர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன் கூறினார். மன்னார் மாந்தை மேற்கில் இடம் பெற்றுவரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பார்வையிடும் பொருட்டு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டருந்த அவர் வீரகேசரி வார வெளியீட்டிற்காக அளித்த விசேட செவ்வியொன்றின்போதே இவ்வாறு கூறினார். அவர் அளித்த செவ்வி விவரம் பின்வருமாறு
கேள்வி:- அண்மையில் மாந்தை மேற்குப் பிரதேசதத்pல் அரசாங்கம் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை அவசர அவசரமாக முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் நீங்கள் அப் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறீர்கள். இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் உங்களுக்கு திருப்தி இருக்கின்றதா?
பதில் பிரதானமாக வன்னியில் இருந்து மிகப்பெரிய அவலங்களுடன் இடம் பெயர்ந்து இன்று முகாம்களில் வாழுகின்ற மக்களைப் பார்வையிடுவதும், அதேவேளை தற்போது அவர்கள் மீள் குடியேற்றப்பட்ட இடங்களுக்குச் சென்று அவர்களுடைய குறைநிறைகளை அபிலாசைகளை கேட்டறிந்து கொள்வதுமே எனது விஜயத்தின் முக்கிய நோக்கம். இந்த முகாம்களில் இருந்து மக்கள் மீள் குடியேற்றத்திற்காக தமது சொந்தப் பிரதேசங்களுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றiஉம மற்றும் அவர்கள் மீளக் குடியேற்றப்படுகின்ற நடவடிக்கைகளை முன்னேற்றகரமான நடவடிக்கை என்றுதான நாங்கள் கருதுகின்றோம்;. ஏனென்றால் மக்கள் மீள் குடியமர்த்தப்படுவது மிக மிக அவசியமான விடயம். அவர்கள் சொந்த இடங்களில் கௌரவமாகவும், சுயமரியாதையாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்பது முக்கியம். தினமும் இரண்டாயிரம், மூவாயிரம் பேர் என்று கடந்த மூன்று வாரங்களாக மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆந்த விடயம் இன்னும் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். அப் பகுதிகளுக்குச் சென்றிருக்கும் மக்களுக்குரிய வசதிகள் அதாவது ஐயாயிரம் ரூபாய் அவர்களுடைய கையில் கொடுத்திருப்பதாகவும் இருபதாயிரம் ரூபாய் வங்கியில் போடப்படும் எனவும் சொல்லப்பட்டிருப்பதோடு ஆறு மாத காலங்களுக்கு நிவாரணம் கொடுப்பதாக சொல்லியிருந்தாலும் அம் மக்களுடைய தேவைகள் இன்னும் அதிகமாகவேதான் இருக்கின்றன.
அவர்கள் இருந்த இடம் முற்று முழுதாக அழிந்து போயிருக்கின்ற நிலையில் மற்றைய பகுதிகளில் இயல்பாக வாழ்பவர்களைவிட அவர்களுடைய தேவைகள் பாரியதாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் இருப்பதற்குரிய வீடு, அவர்களுடைய சுகாதாரம், பிள்ளைகளுடைய கல்வி அவர்களுடைய தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளடங்களாக அவர்களுடைய பாதுகாப்பு இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாக அவர்களிடம் கோரிக்கைகள் உள்ளன.
முகாம்களில் மீதமாக இருக்கின்ற ஒன்றரை இலட்சம் மக்களும் விடுவிக்கப்பட்டு ஒரு திருவிழாக் கோலம் போன்று மக்கள் தங்களுடைய இடங்களுக்கு மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என நாங்கள் எதிர் பார்க்கி;ன்றோம்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பெரும்பாலான மக்கள் பதினைந்து இருபது தடவைகளுக்கு மேல் மாறி மாறி இடம் பெயர்ந்து எல்லாவற்றையும் இழந்து வீசிய கையும் வெறும் கையுமாக சென்ற இந்த மக்கள் இந் நாட்டின் செல்லப் பிள்ளைகளாக நடத்தப்பட வேண்டும் இவர்களுக்குள் ஊனமுற்றவர்கள், கை கால்கள் இழ்ந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள், உற்றார் உறவினர்களை இழந்தவர்கள், எல்லாம் இருக்கின்றார்கள். இவர்களை இந்த நாடே முன்னின்று அவர்கள் சிறப்பாக வாழ்வதற்குரிய வழியை செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.
கேள்வி:- மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மக்களுடைய அன்றாட வாழ்வு முழுமையான இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக நீங்கள் உணருகின்றீர்களா?
பதில்:- நிச்சயமாக நாங்கள் அவ்வாறு கருதவில்லை. மக்கள் இயல்பாக வாழ வேண்டும். அதற்கு போக்குவரத்துக்கான பாதைகள் தங்குதடையின்றி திறந்துவிடப்பட வேண்டும் ஏ-9 வீதியூடான போக்குவரத்து அடையாள அட்டையை மாத்திரம் கொடுத்து பயணம் செய்ய முடியும். பாதுகாப்பு பத்திரம் அனுமதி தேவையில்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும் இன்னும் அந்த நடவடிக்கை மெதுவாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பிரயாணத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சிக்கல்களை முற்றுமுழுதாக நீங்க வேண்டும். ஏனெனில் நாங்கள் இந்த நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகின்றோம். ஆனால் மனிதனுடைய நாளாந்த நடவடிக்கைகளில் பாதுகாப்பு எனும் பெயரில் அனுமதி பத்திரம் எடுப்பதிலும் வேறு விடயங்களிலும் காலம் செலவிடப்படுகின்றமை பொருளாதார நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மந்தமடையச் செய்வதாகத்தான் இருக்கின்றது. அத்தோடு நாளாந்த இயல்பு வாழ்க்கையும் தேக்க மடையும்.
ஒரு பாரிய வீச்சான சமூகப் பொருளதார அபிவிருத்தி நடவடிக்கைகள் வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சொன்னால் மக்களுடைய வாழ்க்கை இலகுபடுதத்ப்பட வேண்டும். மக்களுடைய மனதில் எந்த விதமான சஞ்சலமும் இருக்கக்கூடாது. அந்த சஞ்சலங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கருதுகின்றோம்.
இதைத்தான் பல தடவைகள் அரசாங்கத்திடமும், ஜனாதிபதி அவர்களிடமும் கூட வலியுறுத்தியிருக்கின்றோம்.
இதைத் தொடர்ந்தும் நாங்கள் சொல்லிக் கொண்டேயிருப்போம். அது மாத்திரமல்ல நாங்கள் ஏற்கனவே முகாம்களில் வசிப்பவர்கள். மீள் குடியேற்றப்படுகின்றவர்களின் துயரங்கள் பற்றியும் துன்பங்கள் பற்றியும் சொல்ல வேண்டிய இடங்களில் நாங்கள் சொல்லியே ஆக வேண்டும்.
கேள்வி:- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டம் முடிவற்றிருப்பதாக சொல்லப்பட்டாலும் அதை தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஒரு முடிவாக கருதிவிட முடியுமா?
பதில்: நிச்சயமாக எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். அதாவது இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் அந்த அபிலாசைகள் என்னவென்று சொன்னால் தமிழ் மக்கள் இந்த நாட்டில் தாங்கள் சிங்கள மக்களோடு சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வந்திருக்கின்றார்கள். துரதிஷ்டவசமாக அது பிரிவினை வரைக்கும் போயிருக்கிறது.
ஆனாலும் அந்தக் கோரிக்கையின் சாராம்சம் இந்த நாடு ஒரு பல் இனங்களின் நாடாக எல்லா மக்களும் எல்லா இன சமூகங்களும் சமத்துவமாக வாழ வைக்கப்பட வேண்டும். என்பதைத்தான் அது உள்ளடக்கியிருந்தது.
ஏங்களுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த இடத்தில் நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தது. தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு உலக அளவில் இருந்த ஆதரவு வேறெந்த விடுதலை இயக்கத்திற்கும் உலகத்தில் இருந்திருக்கவில்லை. நாங்கள் இந்தி-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு எல்லோரும் அதனை ஏற்றுச் செயற்பட முன் வந்திருக்க வேண்டும். அல்லது அதில் உள்ள குற்றம் குறைகளைக் களைந்து விவாதித்து செயற்பட முன் வந்திருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் சந்திரிகா அம்மையார் பதவிக்கு வந்த நேரத்தில் ஒரு சமஷ்டி முறையைப பரிந்துரைத்த போது நாங்கள் அந்த விடயங்களை செயற்படுத்த முன் வந்திருக்க வேண்டும் அதுவும் சரிவரவில்லை என்றால் இறுதியாக ஒஸ்லோவில் உதவி வழங்கும் நாடுகள் ஒரு தீர்மானம் எடுத்து ஒரு தீர்வை முன்மொழிந்த போது அந்த தீர்வையாவது பற்றிப் பிடிக்க முன் வந்திருக்க வேண்டும்.
ஏந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் சமரசத்திற்கான இடம் உண்டு எங்களுக்கு பலஸ்தீனம் நல்ல உதாரணம். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நல்ல உதாரணம். யாசீர் அரபாத் போன்ற தலைவர்கள் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் ஒரு கட்டத்தில் சமரசத்திற்குப் போனார்கள். ஆனால் எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் கை நழுவ விட்டு உட் பகைகளை மட்டும் வளர்த்து உரு சமூக சிதைவு இயக்கமாக மாறி விடுதலை இயக்கமாக இருக்காமல் போனதன் விபரீத விளைவுதான் கடைசியாக நடந்த சம்பவங்கள் என்று நினைக்கின்றோம். ஆனபடியால் அதை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முடிவு என்று நாங்ள் கருதவில்லை.
தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல இந்த நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்கள் சமத்துவமாக வாழும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார்கள் அந்தக் கோரிக்கை ஜனநாயக பூர்வமானது. ஆந்தக் கோரிக்கைகள் காலவோட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சமகால உலக அரசியலில் ஒற்றைப் போக்கு அல்லது மேலாதிக்க மனோ நிலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. தனி மனிதனின் ஜனநாயக உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற ஒரு நாட்டில் உள்ள சமூகங்களின் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறான விடயத்தை நோக்கி இந்த நாடு முன்னேற வேண்டும் என நாங்கள் எண்ணுகின்றோம்.
கேள்வி:- தற்போது எதிர்கட்சிகளின் கூட்டணி சிறுபான்மை கட்சிகளின் கூட்டமைப்பு பற்றி பேசப்படுகின்றது. அது எதனை இலக்காகக் கொண்டதாக அமைய இருக்கின்றது.?
பதில்:- நாங்கள் எதிர்கட்சி கூட்டணியைப் பற்றி பேச விரும்பவில்லை. அதில் நாங்கள் சம்பந்தப்படவில்லை. சிறுபான்மை சமூகம் என்ற வார்த்தையில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதாவது நாட்டில் எண்ணிக்கையில் குறைவான தேசிய சமூகஙகள் என்றுதான் அதை சொல்ல வேண்டும். சிறுபான்மை என்பதற்குள்ளேயே ஒரு ஒடுக்குமுறையை நாங்கள் ஏற்றுக் கொள்ளுவோமா? ஏன்று எங்களுக்குள்ளேயே நாங்கள் கேட்க வேண்டியிருக்கிறது.
இன ரீதியான பாரபட்சங்கள் இருக்கின்றது எனும் அடிப்படையில் அதை நிவர்;த்தி செய்வதற்காக இந்த சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவை தற்போது இருக்கிறது. உதாரணமாக இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கின்றது. அதேபோன்று கிழக்கில் நிலங்கள் ஆக்கிரமித்தல் தொடர்பான கேள்விகள் கோரிக்கைகள் இருக்கின்றது.
அது முஸ்லீம் சமூகத்திற்கும் இருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கும் இருக்கிறது. அதே மாதிரியான வேறு பல விடயங்களும் இருக்கின்றது.
ஒரு அதிகாரப் பகிர்வு அல்லது ஒரு அலகு தொடர்பாக குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ளதைப் போல் மாநிலம், மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற முறை சமூகங்களுக்கு அதிகரங்கள் வழங்கப்படுவது தொடர்பான அக்கறைகள் எங்களுக்கு இருக்கின்றன. அந்த வகையில் நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற தேசிய சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் இருக்கின்றது என நாங்கள் கருதுகிறோம்.
கேள்வி:- தற்போதைய சூழ்நிலையில் தமிழ் பேசும் சமூகங்களிடம் எஞ்சியிருக்கின்ற புத்திஜீவிகளாவது ஒன்றிணைந்து நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை எந்த வகையில் முன்னெடுப்பது சாத்தியமாக அமையும்?
பதில்:- எங்கள் முன் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று 13வது திருத்தச் சட்டம் இருக்கின்றது. மற்றையது அனைத்துக் கட்சிகளும் இணைந்து எடுத்துக்கொண்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளின் தீர்மானங்கள். இந்த இரு விடயங்களை பற்றி எங்கள் மத்தியில் இருக்கக்கூடிய புத்தி ஜீவிகள் செயல்முறை இல்லாத கருத்துக்களைச் சொல்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கான ஒரு பெறுபேறாக மக்களுக்குக் கிடைக்கக்கூடிய விதத்தில் இங்குள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்களுக்கு கிடைக்கக்கூடிய விதமாக எதிர்காலத்தில் நடக்க வேண்டும். எழுத வேண்டும். மக்களோடு பேச வேண்டும். அதற்குரிய கருத்துக்களை அரசிடம் அரசியல் தரப்புக்களிடம் வலியுறுத்த வேண்டு;ம்.
கேள்வி:-- தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஆரோக்கியமான அணி ஒன்றை உருவாக்கினால் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறலாம் என கருதப்படுகின்றது. இது தொடர்பான உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: சிறுபான்மை தேசிய சமூகங்களினதும் இடதுசாரிகளுடைய ஐக்கியத்தையும் தேர்தலோடு சம்பந்தப்படுத்தாமல் பார்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் எங்களுக்குள் ஒரு உறவு இருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. யார் வந்தாலும் எங்களுடைய சமூகங்களின் பிரச்சினைகளை நாங்கள் சொல்ல வேண்டும். வலியுறுத்த வேண்டும். அதில் எங்களுக்குள் ஒரு மனம் திறந்த உறவு இருக்க வேண்டும்.
ஒதுக்கப்பட்ட இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்கின்ற சமூகங்கள் என்ற வகையில் எங்களுடைய அரசியல் தனித்துவங்கள் வௌ;வேறு நிலைப்பாடுகளுடன் குறிப்பாக எங்களுடைய சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்வதற்கும் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கும் சமூகங்களுக்கிடையில் உறவு தேவை. அதேநேரம் இடதுசாரிகள் தொடர்பாக இங்கு நான் குறிப்பிடுவது என்னவென்றால் வரலாற்றில் நாம் பகிரங்கமாகச் சொல்லப் போனால் கூடுதலான காலப்பகுதியில் அவர்கள்தான் நேர்மையாக இருந்திருக்கிறார்கள். சுpல இடதுசாரிகள் விதிவிலக்காக இருந்திருக்கலாம்.
தமிழ் சமூகத்திற்கும் மிக எண்ணிக்கையில் குறைவாகவுள்ள தேசிய சிறுபான்மை இனத்தவருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளித்தல் ஊடாக நாட்டை ஐக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதேவேளை சிறுபான்மை இனத்தின் தலைவர்களாக இருந்து மறைந்து போன தொண்டமான், மற்றும் அஷ்ரப் ஆகியோர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகள் ஏராளம் இருக்கின்றன. இதைவிட முற்போக்கு சக்திகள் மற்றைய கட்சிகளில் இருக்கக்கூடிய இந்த பிரச்சினைகளை ஆதரிக்கக் கூடிய ஆட்களோடும் நாங்கள் உறவுகளை வைத்திருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.
நன்றி – வீரகேசரி வார வெளியீடு (22-11-2009)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக