பாக். விமானப்படைத் தளபதி - ஜனாதிபதி கண்டியில் நேற்று சந்திப்பு

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ராவோ கமார் சுலேமான் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கண்டி ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இவர் 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணி லாகூரில் தாக்கப்பட்ட போது பாகிஸ்தான் விமானப்படை ஆற்றிய சேவை குறித்து ஜனாதிபதி அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதேவேளை நேற்று மாலை இலங்கை விமானப்படைத் தலைமை தளபதி ஏயார் மார்ஷல் ரொஹா ன் குணதிலக்கவை சந்தித்தார். இச்சந்திப்பு விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஏனைய விமானப்படை அதிகாரிகளையும் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சந்தித்து உரையாற்றினார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக