இலங்கையின் முதலாவது 'விருப்பு பொழுது போக்குச் சந்தை'

சிறுவர்கள், இளம் சமுதாயத்தினர், பொழுது போக்காளர்கள், மற்றும் நாட்டின் எதிர்காலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 'விருப்பு பொழுது போக்கு சந்தை 2010' எனும் நிகழ்வு அடுத்த வருடம் பெப்ரவரி 12,13,14 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
மிலேனிய யுகம், வாழ்க்கைச் செலவு, பணவீக்கம், அரசியல் குளறுபடிகள் - இவை எல்லாவற்றுக்கும் மத்தியியில் நாகரிக போதையில் சிக்கித் தவிக்கும் இளம் சமுதாயத்தினர்.
போதைப் பொருட்களும், பச்சைக் குத்துதலும் தான் இந்த நாகரிக இளம் சமுதாயத்தின் இன்றைய பொழுது போக்காக உள்ளது.
அடிப்படையிலிருந்தே இந்த நாகரிக மோகத்தினை இல்லாதொழிப்பது தற்போது முயற்கொம்பான காரியம். என்றாலும் அதனையும் முயன்று பார்க்க எத்தனிக்கும், 75 வருட கால சேவையைக் கொண்ட றோட்டரிக் கழகமானது இதற்கு முன் வந்தது.
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் விசேட ஆலோசனை அந்தஸ்தைப் பெற்று, 20 வருட கால சேவையினைப் பூர்த்தி செய்யும் இலங்கை போதைப்பொருள் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து றோட்டரிக் கழகம் இதனை செயற்படுத்தவுள்ளது.
அமைதியாக மூச்சு விடக்கூட நேரம் இல்லாது பறந்து திரியும் உலக வாழ்க்கையில், சிறுவர்கள் அதாவது இளம் சமுதாயத்தைக் கவனிக்கவோ, கைவிடவோ எமக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் தமது முக்கிய தேவை எதுவென்று கூட பலருக்கு தெரிவதில்லை.
அதனால் தான் பெரும்பாலான சிறுவர்கள் கோபம், வன்முறை, மது - போதைப்பொருள் பாவனை, மனஅழுத்தம் போன்ற சொல்லொணா செயற்பாடுகளுக்கு ஆளாகின்றனர்.
சிறுவர்கள், இளம் சமுதாயத்தினர், பொழுது போக்காளர்கள், மற்றும் நாட்டின் எதிர்காலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 'விருப்பு பொழுது போக்கு சந்தை 2010' எனும் நிகழ்வு அடுத்த வருடம் பெப்ரவரி 12,13,14 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
நாட்டினதும் எமது முன்னோர்களினதும் பாரம்பரிய பொழுதுபோக்கு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சியும் மாநாடும் இடம்பெறவுள்ளன. வங்கிகளின் பிரசன்னம், பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை போதைப் பொருள் துஷ்பிரயோக தடுப்புக்கும், கண்டறிதல் செயற்பாடுகளுக்கும் உபயோகிக்கப்படும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் றோட்டரிக் கழக உறுப்பினரும் மஜித் அப்துல் காதர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக விண்ணப்பிக்க விரும்புகின்றவர்கள் பின்வரும் விலாசத்துடன் மின்னஞ்சல் மூலம் அல்லது சுய விலாசமிடப்பட்ட கடித உறையினை டிசம்பர் 30க்கு முன் அனுப்பி விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு:
www.hobbyfair2010.com
The Hobby Fair 2010 ,
C/o. SLANA,
NO.05, Kirimanadala Mawatha,
Nawala,
T/P.011 2868494
Fax. 011 2861743
E-Mail: info@hobbyfair2010.com
Web: www.hobbyfair2010.com

0 கருத்துகள்:
கருத்துரையிடுக