அமெரிக்காவில் மன்மோகன்சிங்:இன்று ஒபாமாவுடன் சந்திப்பு

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிறன்று உத்தியோகபூர்வமாக அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.
அவருக்கு வெகுவிமரிசையான முறையில் மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசுகிறார்.
ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்த பிரதமர் மன்மோகன், அவரது மனைவி குருசரண் கெயூர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கத் தொழிலதிபர்கள், குழந்தைகள் அன்பான வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் மீரா சங்கர் உள்ளிட்டோர் அவர்களை முறைப்படி வரவேற்றார்.
அதன்பின்னர் பிரதமர் உள்ளிட்டோர் அடங்கிய குழு விலார்ட் இன்டர்கொன்டினென்டல் ஹோட்டலுக்குப் புறப்பட்டனர். இந்த ஹோட்டல் அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்படும் முன் பேசிய மன்மோகன் சிங், தான் மேற்கொள்ளும் அமெரிக்கப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மூலமே பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், உலக பொருளாதார தேக்க நிலை போன்ற பிரச்னைகளை எதிர்த்து நின்று போராட முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ பயணம் இன்று தொடங்குகிறது. வெள்ளைமாளிகைக்கு செவ்வாய்க்கிழமைசெல்லும் தரும் பிரதமரை அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் நேரில் வரவேற்பார்கள்.
அந்நிகழ்வில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக